Seenu Ramasamy: கொரோனா தடுப்பூசி எண்ணிக்கையை அதிகரிக்க சீனு ராமசாமியின் ஆலோசனை!

சீனு ராமசாமி

தடுப்பூசி போட்டுக் கொண்ட பிரபலங்களும் சமூக வலைதளங்களில் அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள்.

  • Share this:
    குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை சன்மானம் கொடுத்து நிறைவேற்றியது போல் தடுப்பூசி போடும் பணியையும் நிறைவேற்ற வேண்டும் என இயக்குநர் சீனு ராமசாமி தெரிவித்துள்ளார்.

    கொரோனா தொற்றுநோயை கட்டுப்படுத்தும் பணியில் தமிழக அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. தொற்றுநோயை தடுக்கும் பொருட்டு தடுப்பூசியும் போடப்பட்டு வருகிறது. ஆனால் பலருக்கு தடுப்பூசி போடுவதில் மிகுந்த குழப்பங்களும், சந்தேகங்களும் எழுந்துள்ளன. அதனால் பெரும்பாலானோர் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன் வர தயங்குகின்றனர்.

    இதனை சரிசெய்யும் விதத்தில் அரசு பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. தடுப்பூசி போட்டுக் கொண்ட பிரபலங்களும் சமூக வலைதளங்களில் அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில், இயக்குநர் சீனு ராமசாமி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ”குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை எப்படி சன்மானம் தந்து வெற்றிகரமாக அன்றைக்கு நிறைவேற்றினார்களோ அது போல கொரோனா தடுப்பூசியிடும் பணியை தமிழக அரசு நிறைவேற்றி சகல மக்களும் தடுப்பூசியின் மீது ஆர்வம் கொள்ள செய்தல் வேண்டுமென தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

    சமூக வலைதளங்களில் முன் வைக்கப்படும் கோரிக்கைகளையும் கவனத்தில் எடுத்துக்கொள்ளும் தமிழக அரசு, இதனையும் எடுத்துக் கொள்ளுமா என பொறுத்திருந்து பார்ப்போம்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: