Tamil Cinema: சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இயக்குநர் போக்சோவில் கைது

கைதான சத்ய பிரகாஷ்

சிறுமியின் பெற்றோரிடமிருந்து வந்த புகாரின் அடிப்படையில், சத்ய பிரகாஷ் ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தையும் உள்ளதை காவல்துறையினர் கண்டறிந்தனர்.

  • Share this:
    சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, தன்னை திருமணம் செய்து கொள்ள கட்டாயப்படுத்தியதற்காக தமிழ் இயக்குநர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் இருவருமே போலீஸார் என்பது இன்னும் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது. சிறுமியின் பெற்றோர் தனது ஆன்லைன் வகுப்புகளுக்கு வசதியாக புதிய ஸ்மார்ட்போனை வாங்கி தந்துள்ளனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, அவர் தனது பெரும்பாலான நேரத்தை சமூக ஊடகங்களில் செலவிட்டதாகக் கூறப்படுகிறது. இன்ஸ்டாகிராமில் 'சமுதாயம்' என்ற திரைப்படத்தின் இயக்குநராக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட சத்ய பிரகாஷ் என்பவருடன் நட்பாக பழகியிருக்கிறார்.

    சிறுமியை நடிக்க வைப்பதாகக் கூறி, சென்னை மதுரவாயலில் உள்ள தனது வீட்டிற்கு அவரை அழைத்திருக்கிறார் அந்த இயக்குநர். அங்கு வைத்து பலமுறை அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். பின்னர் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கட்டாயப்படுத்தியிருக்கிறார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    சிறுமியின் பெற்றோரிடமிருந்து வந்த புகாரின் அடிப்படையில், சத்ய பிரகாஷ் ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தையும் உள்ளதை காவல்துறையினர் கண்டறிந்தனர். மனைவியிடமிருந்து பிரிந்து வாழும் அவர், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சிறுமியை திருமணம் செய்ய முயன்றிருக்கிறார். இதையடுத்து அந்த நபர் இப்போது போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: