இரண்டாம் குத்து பட இயக்குநரின் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு

‘இரண்டாம் குத்து’ பட இயக்குநரின் அடுத்த பட டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் குத்து பட இயக்குநரின் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு
இயக்குநர் சந்தோஷ்.பி.ஜெயக்குமார்
  • Share this:
சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் 2018-ம் ஆண்டு வெளியான படம் 'இருட்டு அறையில் முரட்டுக் குத்து'. அடல்ட் காமெடி ஹாரர் ஜானரைச் சேர்ந்த இத்திரைப்படம் இளைஞர்களிடையே வரவேற்பைப் பெற்று ஹிட் அடித்தது. அதேவேளையில் விமர்சனங்களும் எதிர்ப்புகளும் கிளம்பின.

ஆனாலும் அதை எல்லாம் கருத்தில் கொள்ளாத இயக்குநர் சந்தோஷ்.பி.ஜெயக்குமார் அதன் 2-ம் பாகமாக 'இரண்டாம் குத்து' என்ற படத்தை இயக்கி நடித்தார். தணிக்கையில் 'A' சான்றிதழ் பெற்ற இந்தப் படத்தின் டீசர் வெளியான போது பல தரப்பிலிருந்து எதிர்ப்பு எழத் தொடங்கியது.

இந்தப் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்ட இயக்குநர் பாரதிராஜா, கல்வியை போதிக்கின்ற இடத்தில் காமத்தை போதிக்கவா வந்தோம் என கேள்வி எழுப்பினார். மேலும் தார்மீகப் பொறுப்புகளோடு சமூக பாதிப்புகள் நேராமல் பல கலைஞர்கள் கட்டமைத்த கூடு இன்று வியாபாரம் என்ற போர்வையில் கண்ணியமற்று சீரழிக்கப்படுவதாக தனது கடும் கண்டனத்தையும் பதிவு செய்திருந்தார்.

இந்நிலையில் தற்போது சந்தோஷ்.பி.ஜெயக்குமாரின் அடுத்த பட டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. அவரே இயக்கி நடிக்கும் இத்திரைப்படத்துக்கு ‘மிஸ்டர்.வெர்ஜின்’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.ரொமான்டிக் காமெடி ஜானரில் உருவாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள இத்திரைப்படம் 2021-ம் ஆண்டு கோடை விடுமுறைக்கு திரைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
First published: November 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading