விஜய் சேதுபதி படத்தை ஆஸ்கருக்கு அனுப்பியிருக்கலாம் - பாலிவுட் இயக்குநர் கருத்து

news18
Updated: September 23, 2019, 4:47 PM IST
விஜய் சேதுபதி படத்தை ஆஸ்கருக்கு அனுப்பியிருக்கலாம் - பாலிவுட் இயக்குநர் கருத்து
விஜய்சேதுபதி
news18
Updated: September 23, 2019, 4:47 PM IST
சூப்பர் டீலக்ஸ் படத்தை ஆஸ்கருக்கு அனுப்பாதது குறித்து பிரபல பாலிவுட் இயக்குநர் கருத்து தெரிவித்துள்ளார்.

ரன்வீர் சிங், ஆலியா பட், நடிப்பில் ஸோயா அக்தர் இயக்கியிருந்த படம் கல்லி பாய். இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியான இந்தப் படம், 220 கோடி ரூபாய் வரை வசூல் செய்து மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்தது.
இந்தியாவில் மட்டும் 165 கோடி ரூபாய் வரை வசூலித்தது. விமர்சன ரீதியிலும் அந்தப் படம் மிகுந்த வரவேற்பைப் பெற்றிருந்தது.


இந்தப் படம் 92-வது ஆஸ்கர் விருதுக்கான சிறந்த வெளிநாட்டு படத்துக்கான பிரிவில் இந்தியா சார்பில் அனுப்பவதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த வெளிநாட்டுத் திரைப்படங்களுக்கான ஆஸ்கர் விருதைப் பெறுவதற்கு 28 இந்தியப் படங்கள் போட்டியிட்டன. அந்த 28 படங்களிலிருந்து ஒரு படத்தை இந்தியா தேர்வு செய்வதற்கான பணி முதல்முறையாக கொல்கத்தாவில் நடைபெற்றது.

சூப்பர் டீலக்ஸ், ஒத்த செருப்பு, வட சென்னை ஆகிய 3 தமிழ் படங்களும் போட்டியிட்டன. தேசிய விருதுகள் பெற்ற வங்காள இயக்குநர் அபர்ணா சென், தேர்வுக் குழுவின் தலைவராகச் செயல்பட்டார்.

மதர் இந்தியா, சலாம் பாம்பே, லகான் ஆகிய 3 இந்தியப் படங்களே ஆஸ்கர் விருதுக்கு (டாப் 5) இதுவரை பரிந்துரைக்கப்பட்டுள்ளன. எனினும் அந்த 3 படங்களும் ஆஸ்கர் விருதைப் பெறவில்லை. இதையடுத்து சிறந்த வெளிநாட்டுத் திரைப்படங்களுக்கான ஆஸ்கர் விருதை எந்த ஒரு இந்தியத் திரைப்படமும் பெறவில்லை என்கிற நிலைமை தற்போது வரை தொடர்கிறது.

Loading...

இந்நிலையில், இந்தியா தொடர்பாக ஆஸ்கர் விருதுக்கு கல்லி பாயை விடவும் சூப்பர் டீலக்ஸ் படத்தை அனுப்பியிருக்கலாம் என்று இயக்குநர் பாலிவுட் இயக்குநர் சஞ்சய் குப்தா கூறியுள்ளார்.

இதுகுறித்த தனது ட்விட்டர் பதிவில், என்னைப் பொறுத்தவரை சூப்பர் டீலக்ஸ் தான் இந்த வருடத்தின் சிறந்த படம். ஆனாலும் அதற்குத் தகுதியில்லை. என்று மறைமுகமாக ஆஸ்கருக்கு அனுப்பாதது குறித்து விமர்சித்துள்ளார்.இயக்குநர் சஞ்சய் குப்தா, காபில், ஜிந்தா உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார்.

தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய்சேதுபதி, ரம்யா கிருஷ்ணன், ஃபஹத் பாசில், சமந்தா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த மார்ச் 29-ம் தேதி சூப்பர் டீலக்ஸ் படம் வெளியானது.

வீடியோ பார்க்க: படம் ஓட விஜய் அரசை விமர்சிக்கிறார் -அமைச்சர் ஜெயக்குமார்

First published: September 23, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...