விஜய் சேதுபதி எடுத்தது நல்ல முடிவு - சமுத்திரக்கனி

விஜய் சேதுபதி சிறப்பான முடிவை எடுத்திருப்பதாக இயக்குநர் சமுத்திரகனி பாராட்டியுள்ளார்.

விஜய் சேதுபதி எடுத்தது நல்ல முடிவு - சமுத்திரக்கனி
சமுத்திரக்கனி | விஜய் சேதுபதி
  • Share this:
இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படம் அறிவிக்கப்பட்டு அதற்கு ‘800’ என டைட்டில் வைக்கப்பட்டது. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிக்க இருந்த நிலையில் அவர் நடிக்கக் கூடாது என ரசிகர்கள், அரசியல்வாதிகள், தமிழ்த்தேசிய அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

‘800’ படத்தின் தயாரிப்பு நிறுவனம் இந்தப் படம் அரசியல் படமல்ல என்று விளக்கமளித்தது. அதேபோல் முத்தையா முரளிதரனும் தன் மீதான சர்ச்சைகளுக்கு விளக்கமளித்து அறிக்கை வெளியிட்டிருந்தார். ஆனாலும் எதிர்ப்புகள் குறையவில்லை. இந்நிலையில் நேற்று அறிக்கை வெளியிட்ட முத்தையா முரளிதரன், “என் மீதுள்ள தவறான புரிதலால் 800 படத்தில் இருந்து விலக வேண்டும் என்று நடிகர் விஜய்சேதுபதி அவர்களுக்கு சிலர் தரப்பில் இருந்து கடுமையான அழுத்தம் தருவதை நான் அறிகிறேன். எனவே என்னால் தமிழ்நாட்டில் ஒரு தலைசிறந்த கலைஞன் பாதிப்படைவதை நான் விரும்பவில்லை.

அதுமட்டுமல்லாது விஜய் சேதுபதியின் கலைபயணத்தில் வருங்காலங்களில் தேவையற்ற தடைகள் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதையும் கருத்தில் கொண்டு இத்திரைப்படத்தில் இருந்து விலகிக் கொள்ளுமாறு அவரை கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறினார்.


மேலும் படிக்க: யூடியூப், ட்விட்டர் உள்ளிட்ட சோஷியல் மீடியாவில் சிம்பு என்ட்ரி - ரசிகர்கள் கொண்டாட்டம்

இதையடுத்து இந்தப் படத்திலிருந்து விலகிய விஜய் சேதுபதி முத்தையா முரளிதரனின் அறிக்கையை பகிர்ந்து நன்றி.. வணக்கம் என்று சொல்லி ‘800’ படத்துக்கு என்ட் கார்ட் போட்டார். விஜய் சேதுபதியின் இந்த முடிவை திரைத்துறையினர் பலரும் வரவேற்றுள்ளனர்.


அந்த வகையில் நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த இயக்குநர் சமுத்திரக்கனி, எமோஷனலான முடிவு என்றாலும் சிறப்பான முடிவு என விஜய் சேதுபதியை பாராட்டினார். மனதில் இருந்த வலியை தமிழர்கள் வெளிப்படுத்தினர். அதனை விஜய் சேதுபதி ஏற்றுக் கொண்டிருப்பது நல்ல விஷயம் என்றும் அவர் கூறினார்.
First published: October 20, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading