வடிவேலுவுக்கு பண்ண ஸ்கிரிப்ட் யோகிபாபு கைக்கு போனது எப்படி? - சீக்ரெட் உடைத்த ‘பேய்மாமா’இயக்குநர்

வடிவேலுக்காக தயார் செய்யப்பட்ட கதை என்றதும் முதலில் யோகி பாபு நடிக்கத் தயங்கியதாக இயக்குநர் சக்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

வடிவேலுவுக்கு பண்ண ஸ்கிரிப்ட் யோகிபாபு கைக்கு போனது எப்படி? - சீக்ரெட் உடைத்த ‘பேய்மாமா’இயக்குநர்
வடிவேலு | யோகி பாபு
  • Share this:
சக்தி சிதம்பரம் இயக்கத்தில் யோகிபாபு ஹீரோவாகவும், மாளவிகா மேனன் ஹீரோயினாகவும் நடித்துள்ள படம் ‘பேய்மாமா’. மேலும் எம்.எஸ்.பாஸ்கர், லிவிங்ஸ்டன், மொட்டை ராஜேந்திரன், இமான் அண்ணாச்சி, மனோபாலா, ரேகா, கோவை சரளா, ரமேஷ் கண்ணா, வையாபுரி, சிங்கம்புலி, பவர்ஸ்டார், அனுமோகன், பாஸ்கி, சாம்ஸ், லொள்ளுசபா மனோகர், அபிஷேக், பேபி சவி என ஏராளமான நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.

ஆரம்பத்தில் வடிவேலுவை வைத்து பேய்மாமா படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட படக்குழு, பின்னர் யோகி பாபுவை நாயகனாக நடிக்க வைத்தது. இந்நிலையில் இன்று நடைபெற்ற இத்திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் சக்தி சிதம்பரம் வடிவேலுக்காக தயார் செய்த கதையில் யோகி பாபு எப்படி வந்தார் என்று விளக்கமளித்துள்ளார்.

இயக்குநர் சக்தி சிதம்பரம் பேசியதாவது, “வடிவேலுவை இரட்டை வேடங்களில் நடிக்க வைத்து இந்தப் படத்தை எடுக்கலாம் என்று முதலில் யோசித்திருந்தேன், சில பல காரணங்களால் அது நடக்காமல் போய்விட்டது. அப்போது தான் ‘இம்சை அரசன்’ படத்தில் வடிவேலுவுக்கு பதில் யோகிபாபு நடிக்கவிருப்பதாக செய்தி வந்தது. ஆனால் அந்த செய்தி உண்மை இல்லை.
ஆனால் அந்த செய்தி மூலமாக நாம் ஏன் யோகிபாபுவை இந்தப் படத்தில் நடிக்க வைக்கக் கூடாது எனத் தோன்றியது. பின்னர் அவரிடம் பேசினேன். வடிவேலுக்காக தயார் செய்யப்பட்ட கதை என்றதும் யோகி பாபு முதலில் தயங்கினார். பின்பு சம்மதித்துவிட்டார்.

இந்தப் படத்தில் யோகிபாபு பிக் பாக்கெட் அடிப்பவராக நடித்துள்ளார். அவரது வாழ்க்கையில் நடக்கின்ற சம்பவங்கள் தான் படம். இதில் கொரோனா மாதிரியான ஒரு விஷயமும் இருக்கிறது. வெளிநாட்டு மருத்துவக் கம்பெனியுடன் இணைந்து கொண்டு இங்கே இருக்கும் சிலர் ஒரு வைரஸை மக்களிடம் பரப்புகிறார்கள். அந்த வைரஸூக்கான மருந்தும் அவர்களிடம் இருக்கும். ஆனால் அதை உடனே வெளியிடாமல் நோய் அதிகமாக பரவவேண்டும் என்று காத்திருக்கிறார்கள்.

இந்த நேரத்தில் தலைமுறை தலைமுறையாக சித்த மருத்துவ சேவையை செய்கின்ற குடும்பத்தை சேர்ந்த ஒருவர் அந்த வைரஸுக்கு மருந்து கண்டுபிடிக்கிறார். இதை அறிந்த அந்த வெளிநாட்டு மருத்துவக்குழு அந்த சித்த மருத்துவக் குடும்பத்தையே கொலை செய்துவிடுகிறார்கள். அவர்களது ஆவி யோகிபாபுவுடன் சேர்ந்து எதிரிகளை பழிவாங்கி எப்படி மக்களை வைரஸிலிருந்து காப்பாற்றினார்கள் என்பதை முழுக்க முழுக்க காமெடி கலந்து உருவாக்கி இருக்கிறோம். இந்தப் படம் நிச்சயமாக திரையரங்கில் தான் வெளியாகும்” இவ்வாறு இயக்குநர் சக்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
First published: October 19, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading