முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / விஜயகாந்துக்கு அன்பு முத்தம்.. நேரில் சந்தித்த எஸ்.ஏ.சந்திரசேகர்.. நெகிழ்ச்சி தருணங்கள்!

விஜயகாந்துக்கு அன்பு முத்தம்.. நேரில் சந்தித்த எஸ்.ஏ.சந்திரசேகர்.. நெகிழ்ச்சி தருணங்கள்!

விஜயகாந்த்

விஜயகாந்த்

விஜயகாந்தை மூத்த இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் நேரில் சந்தித்துள்ளார். அவர்கள் அன்புடன் பேசிக்கொண்ட படம் சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்து வருகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

நடிகர் விஜயகாந்தை சந்தித்திருக்கிறார் மூத்த இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர். தமிழ் சினிமாவில் கேப்டன் என அன்போடு அழைக்கப்பட்டு, உச்ச நட்சத்திரமாக திகழ்ந்தவர் நடிகர் விஜயகாந்த். தன்னுடைய நடிப்புத் திறமை மூலம், திரையுலகில் மட்டும் இல்லாமல் மக்கள் மத்தியில் தனக்கென ஓரிடத்தைப் பிடித்தார்.

விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றன. இவருடைய பல படங்கள் திரையரங்குகளில் அதிக நாட்கள் ஓடி சாதனை படைத்தது. நடிகர் சங்க தலைவராக விஜயகாந்த் இருந்தபோது, பல ஆண்டுகளாக அடைக்க முடியாமல் இருந்த கடனை, கலை நிகழ்ச்சிகள் நடத்தி அடைத்தார். அது மட்டுமல்லாமல் நலிவடைந்த கலைஞர்களுக்கு ஓய்வூதிய திட்டத்தையும் செயல்படுத்தியிருந்தார்.

பின்னர் அரசியலில் நுழைந்து அங்கும் தனக்கென ஓரிடத்தைப் பிடித்த விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருக்கிறார். அவர் மீண்டும் பழையபடி கர்ஜிக்க வேண்டுமென காத்திருக்கிறார்கள் தேமுதிக தொண்டர்கள்.

இந்நிலையில் விஜயகாந்தை மூத்த இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் நேரில் சந்தித்துள்ளார். அவர்கள் அன்புடன் பேசிக்கொண்ட படம் சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்து வருகிறது. இவர்கள் கூட்டணியில் செந்தூரப்பாண்டி, வெற்றி, ராஜதுரை, நீதியின் மறுபக்கம், சாட்சி, புதுயுகம், ஓம் சக்தி உள்ளிட்ட பல படங்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Director S.A.Chandrasekar, Vijayakanth