என்னுடன் நடிக்க பயந்தாரா பிரியா பவானி சங்கர்? - எஸ்.ஜே.சூர்யா ஓபன் டாக்!

சிம்ரன், நிலாவுக்குப் பின்னர் எனக்கு பொருத்தமான ஜோடியாக பிரியா பவானி சங்கர் இருந்தார் என எஸ்.ஜே.சூர்யா கூறியுள்ளார்

என்னுடன் நடிக்க பயந்தாரா பிரியா பவானி சங்கர்? - எஸ்.ஜே.சூர்யா ஓபன் டாக்!
எஸ்.ஜே.சூர்யா | பிரியா பவானி சங்கர்
  • News18
  • Last Updated: May 16, 2019, 1:07 PM IST
  • Share this:
பிரியா பவானி சங்கர் தன்னுடன் நடிக்க பயப்பட்டது ஏன் என்பது குறித்த கேள்விக்கு நடிகரும், இயக்குநருமான எஸ்.ஜே.சூர்யா பதிலளித்துள்ளார்.

ஒரு நாள் கூத்து பட இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா , ப்ரியா பவானி ஷங்கர் , கருணாகரன், உள்ளிட்டோர் நடித்துள்ள படம் மான்ஸ்டர். இவர்களுடன் எலி பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ளது. இந்தப் படம் நாளை திரைக்கு வர இருக்கிறது.

சமீபத்தில் நடந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய பிரியா பவானி சங்கர்,  "ஆரம்பத்தில் நானும் எஸ்.ஜே.சூர்யா படங்களை பார்த்து வளர்ந்தவள் தான். அதனால் இந்தப் படத்தில் நடிக்க கேட்டபோது பயமாக இருந்தது. பின்னர் கதைகேட்ட பின்பு நடிக்க சம்மதித்தேன்” என்று கூறினார்.
இந்நிலையில் இதுகுறித்து சமீபத்தில் நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்த எஸ்.ஜே.சூர்யா, “பிரியா பவானி சங்கர் கூறியதை வைத்து என்னுடன் நடிக்க நடிகைகள் தயங்குகிறார்களா என்ற கேள்வியை பலரும் கேட்கின்றனர். பிரியா பவானி சங்கர் மாணவியாக இருந்தபோது நான் நடித்த நியூ உள்ளிட்ட படங்களை பார்த்திருப்பார். அந்த எண்ணத்தில் குடும்ப பெண்ணாக எஸ்.ஜே.சூர்யாவுடன் நடிப்பது சரியாக இருக்குமா என்று எண்ணி இருக்கலாம். அதற்கான தயக்கமாகக் கூட இருக்கலாம்.

சிம்ரன், நிலாவுக்குப் பின்னர் எனக்கு பொருத்தமான ஜோடியாக பிரியா பவானி சங்கர் இருந்தார். எனது படங்களைப் போல் மான்ஸ்டர் படம் கவர்ச்சியாக இருக்காது” என்று கூறியுள்ளார்.வீடியோ பார்க்க: எஸ்.ஜே.சூர்யாவுடன் நடிக்க பயந்தேன் - பிரியா பவானி சங்கர்!

First published: May 16, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading