தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க தேர்தல் பிப்ரவரி 27 அன்று நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் ஆர்கே செல்வமணி தலைமையில் புதுவசந்தம் என்ற ஓர் அணியும், கே பாக்யராஜ் தலைமையில் இமயம் என்ற ஓர் அணியும் போட்டியிடுகிறது. இருதரப்பினரும் தங்களுடைய வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் நிகழ்வுகளில் பரஸ்பரம் தாக்கி பேசியுள்ளனர்.
கே பாக்யராஜ் பேசுகையில் செல்வமணியை குறிப்பிட்டு, நீ எடுத்த படங்கள் ஓடியதாக சொல்கிறார்கள். ஆனால் அந்த படங்களை நீதான் எடுத்தாய் என்று எனக்கு சந்தேகமாக உள்ளது என விமர்சித்திருந்தார். இதற்கு ஆர் கே செல்வமணியின் அணி சார்பில் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. அந்த அணியை சேர்ந்தவர்கள் சார்பில் எழுதப்பட்டிருக்கும் திறந்த மடல் ஒன்றில் பாக்யராஜை கடுமையாக விமர்சித்துள்ளனர். முக்கியமாக பாக்யராஜ் அளித்திருக்கும் வாக்குறுதிகளை பொய்யாக தரப்பட்ட வாக்குறுதிகள் என கடுமையாக சாடியுள்ளனர்.
60 வயதுக்கு மேற்பட்ட இயக்குநர்களுக்கு மாதம் 2000 ரூபாய் ஓய்வு ஊதியம் தருவதாக கே பாக்யராஜ் வாக்குறுதி அளித்திருந்தார். "நான்கு வருடங்களுக்கு மேலாக எழுத்தாளர் சங்கத்தில் இருக்கிற நீங்கள் இதுவரை ஒரே ஒரு ஜீவனுக்கு கூட பென்ஷன் வழங்கவில்லை. அப்படி இருக்கையில் எப்படி எங்கள் (இயக்குனர்) சங்கத்தில் உள்ளவர்களுக்கு நீங்கள் பென்ஷன் தருவீர்கள்" என்று கேட்டுள்ளனர்.
இயக்குநர் சங்கத்தில் 60 வயதை கடந்தவர்கள் சுமார் 400 பேர்கள் உள்ளனர். இவர்களுக்கு மாதம் 2000 ரூபாய் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்றால் மாதத்திற்கு 8 லட்ச ரூபாய் தேவைப்படும். அப்படியானால் வருடத்திற்கு கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய். வருடம் ஒரு கோடி ரூபாய் வருவது என்றால் வங்கியில் டெபாசிட் தொகை 16 கோடி ரூபாய் வைத்திருக்க வேண்டும். அவ்வளவு பணம் இயக்குனர் சங்கத்தில் எங்கு உள்ளது என்று லாஜிக்காக இந்த கடிதத்தில் கேட்டுள்ளனர்.
பாக்யராஜ் பொய்யான வாக்குறுதி தந்து ஏமாற்றுகிறார் என்பது இவர்களது குற்றச்சாட்டு.
ஆமாம் நான் காதலிக்கிறேன்... மனம் திறந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!
அதுபோல் நான்கு வருடமாக எழுத்தாளர் சங்கத்தில் இருந்தும் ஒரு பைசா கூட நீங்கள் நிதி திரட்டியது இல்லை. பிறகு எப்படி 16 கோடி ரூபாய் திரட்ட போகிறீர்கள் என்றும் கேட்டுள்ளார்கள். முத்தாய்ப்பாக, சினிமாவில் மட்டும் தான் கதை வெல்லும்.. திரைக்கதை வெல்லும்.. ஆனால் சங்கத்தில் உண்மை மட்டுமே வெல்லும். பதவிக்காக பொய் சொல்லி இருக்கிற மரியாதையை கெடுத்துக் கொள்ளாதீர்கள் என அந்த கடிதத்தில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
வலிமை படத்தைப் பார்த்த பெற்றோர்... மனம் நெகிழ்ந்த அஜித்!
தெருவோர அரசியல் கூட்டங்களை மிஞ்சிவிடும் தொனியில் இருக்கிறது இவர்களது குற்றச்சாட்டும் வசைகளும். மக்களால் மரியாதையுடன் பார்க்கப்படும் கலைஞர்கள் இவர்கள் என்பது தான் இன்னும் அதிர்ச்சிகரமான விஷயம்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.