15 மாத குழந்தை உட்பட குடும்பத்தினர் 14 பேருக்கு கொரோனா - மாஸ்டர் பட பிரபலம் உருக்கமான பதிவு

மாஸ்டர்

கடந்த 20 நாட்களாக மனஉளைச்சலில் இருந்து வந்ததாகவும் ரத்ன குமார் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளாார்.

 • Share this:
  15 மாத குழந்தை முதல் 83 வயது பாட்டி வரை என் குடும்பத்தை சேர்ந்த 14 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக இயக்குனர் ரத்ன குமார் தெரிவித்துள்ளார்.

  கொரோனா 2-வது அலை இந்தியா முழுவதும் தீவிரமடைந்துள்ள நிலையில் திரைபிரபலங்கள் பலர் கொரோனாவால் சிக்கி தவித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான மேயாத மான் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ரத்ன குமார்.

  இதையடுத்து நடிகை அமலாபால் கதாநாயகியாக நடித்த ஆடை படத்தின் மூலம் தமிழ் சினிமாவை தன்பக்கம் திரும்பி பார்க்க வைத்தார். மேலும் இயக்குனராக மட்டுமல்லாமல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற மாஸ்டர் படத்தில் வசனகர்த்தாவாக பணியாற்றினார்.

  Also Read :  மனிதமும், சமூகநீதியுமே எனது அடையாளம்.! ஜாதி இல்லை.. டாக்டர் ஷர்மிளா நெத்தியடி

  இதனிடையே ரத்ன குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், 15 மாத குழந்தை முதல் 83 வயது பாட்டி வரை என் குடும்பத்தை சேர்ந்த 14 பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக உருக்கமாக பதிவிட்டுள்ளார்.  அதில், அப்பா, பாட்டி, தம்பியின் மனைவி, என் மாமியார் என சிலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தேரினர். கடந்த 20 நாட்களாக நேர்ந்த பல மன உளைச்சல்களை கடந்து இன்று மீண்டும் இயல்புநிலைக்கு திரும்பியது வீடு என்றுள்ளார்.
  Published by:Vijay R
  First published: