HOME»NEWS»ENTERTAINMENT»cinema director rathnakumar tweet about vijay master movie release postponed msb
மிகவும் வருத்தமாக உள்ளது... மாஸ்டர் குறித்து இயக்குநர் வருத்தம்!
ரசிகர்களும் மாஸ்டர் படத்தின் முதல்நாள் முதல் காட்சியை குறிப்பிடும் விதமாக #MASTERFDFS என்ற ஹேஷ்டேக்கை ரசிகர்கள் இந்திய அளவில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
மாஸ்டர் திரைப்படம் குறிப்பிட்ட தேதியில் திரைக்கு வராதது குறித்து இயக்குநர் ரத்னகுமார் வருத்தம் தெரிவித்துள்ளார்.
விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் மாஸ்டர். இத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனனும், வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்துள்ளனர். இவர்களுடன் ஆன்ட்ரியா, சாந்தனு, கவுரி கிஷான், அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சேவியர் பிரிட்டோ தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. இத்திரைப்படத்தை இன்று (ஏப்ரல் 9) வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்த நிலையில், நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருப்பதால் படத்தை குறித்த தேதியில் ரிலீஸ் செய்யமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் மாஸ்டர் படத்தில் பணியாற்றிய இயக்குநர் ரத்னகுமார் தனது ட்விட்டர் பதிவில், ”கொரோனா மட்டும் வராமல் இருந்தால் இந்நேரம் மாஸ்டர் திரைப்படம் திரைக்கு வந்திருக்கும். படப்பிடிப்பின் போது டெல்லியில் ஏற்பட்ட காற்று மாசு, அதையடுத்து போராட்டம், வருமானவரித்துறையினர் சோதனை. இப்போது இந்த சூழ்நிலை. ஒரு ரசிகனாக மிக வருத்தமாக உள்ளது. எங்களிடம் கடைசி வரை சிரிப்பு இருக்கும். வாழ்வது தான் முதலில். அடுத்தது தான் கொண்டாட்டம்” என்று பதிவிட்டுள்ளார்.
#Master would have released by now if #CoronaOutbreak didn't happen. Can see lot of sad tweets, As a fan it hurts big. Pollution, Protests, Raid & now this. Anyway we will have the last laugh💪😊.
Survival First😷
Celebrations Later 🎉🥳
Suddenly this selfie looks Nostalgic😌😍 pic.twitter.com/bBRqjBRePI
ரசிகர்களும் மாஸ்டர் படத்தின் முதல்நாள் முதல் காட்சியை குறிப்பிடும் விதமாக #MASTERFDFS என்ற ஹேஷ்டேக்கை ரசிகர்கள் இந்திய அளவில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.