இந்தியாவை நினைத்தால் பயமாக இருக்கிறது - இயக்குநர் ரத்னகுமார்

இந்தியாவை நினைத்தால் பயமாக இருக்கிறது - இயக்குநர் ரத்னகுமார்
இயக்குநர் ரத்னகுமார்
  • Share this:
இந்தியாவை நினைத்தால் சற்று பயமாகவே உள்ளதாக இயக்குநர் ரத்னகுமார் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா பரவுவதைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் அள்ளும் பகலும் அயராது உழைக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்து உற்சாகப்படுத்துமாறு பிரதமர் மோடி கடந்த 22-ம் தேதி கேட்டுக் கொண்டார்.

மேலும் கொரோனா தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள ஒரு நாள் சுய ஊரடங்கை கடைபிடிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.


பிரதமர் சொன்னபடி ஊரடங்கை கடைபிடித்த பொதுமக்கள் 22-ம் தேதி மாலை 5 மணியளவில் கைதட்டி மருத்துவர்கள் உள்ளிட்ட ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்தனர். அதேவேளை ஒரு சில இடங்களில் மாலை நேரத்தில் அதிகப்படியான மக்கள் ஒன்று கூடி இதை ஒரு கொண்டாட்டமாகவே வெளிப்படுத்தினர். அதுதொடர்பான வீடியோக்கள் வெளியானதை அடுத்து கடும் எதிர்ப்புகளும், விமர்சனங்களூம் எழுந்தன.

இந்நிலையில் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டிருக்கும் இயக்குநர் ரத்னகுமார், “போராட வர சொன்னால் வீட்டில் இருந்துக்கொண்டும், வீட்டில் இருக்க சொன்னால் வீதியில் இறங்கியும் சுத்தத்தால் விரட்ட வேண்டிய கிருமியை சத்தத்தால் விரட்ட நினைக்கும் மூடர்கள் சூழ் இந்தியாவை நினைத்தால் சற்று பயமாகவே உள்ளது.” என்று காட்டமாக குறிப்பிட்டுள்ளார்.மேலும் படிக்க: எங்களுக்குள் ஈகோ இல்லை... எனது மூத்த அண்ணன் - அனிருத் புகழாரம்First published: March 24, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்