Home /News /entertainment /

தளபதி 67 அப்டேட்டை வெளியிட்ட பிரபல இயக்குனர்… தீபாவளியன்று அறிவிப்பு வெளியாகலாம்

தளபதி 67 அப்டேட்டை வெளியிட்ட பிரபல இயக்குனர்… தீபாவளியன்று அறிவிப்பு வெளியாகலாம்

லோகேஷ் கனகராஜ் - ரத்னகுமார்.

லோகேஷ் கனகராஜ் - ரத்னகுமார்.

மாஸ்டர் படத்தில் வசனம் எழுதிய இயக்குனர் ரத்னகுமார்தான் தளபதி 67-ல் லோகேஷ் உடன் இணைந்து பணியாற்ற உள்ளார். ஆடை, மேயாதமான், குலு குலு ஆகிய படங்களை ரத்னகுமார் இயக்கியுள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    விஜய் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கும் தளபதி படத்தின் அப்டேட் வெளியாகி உள்ளது. இதனை வெளியிட்டுள்ள பிரபல இயக்குனரும், கதை ஆசிரியருமான ரத்னகுமார், தனது ட்விட்டர் பதிவில் ஒரு சில குறியீடுகளை வைத்துள்ளார். இதனை வைத்துப் பார்க்கும்போது தீபாவளிக்கு படம் குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படம் மிகப்பெரும் வெற்றியை பெற்றது. விஜய்யின் முந்தைய படங்களை போல் இல்லாமல், வித்தியாசமான முறையில், அதேநேரத்தில் ரசிகர்கள் அவரிடம் எதிர்பார்க்கும் அத்தனை அம்சங்களையும் உள்ளடக்கியதாக மாஸ்டர் திரைப்படம் வெளியானது.

    இந்தப்படத்தில் வலுவான வில்லன் விஜய்சேதுபதியுடன், விஜய் மோதியிருப்பார். படத்தின் பாடல்கள், காதல் காட்சிகள் உள்ளிட்டவை வரவேற்பை பெற்றன. இந்த படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் திரைப்படம் மிகப்பெரும் வெற்றியைப் பெற்றது.

    சுதந்திர தினத்தையொட்டி குடும்பத்துடன் தேசிய கொடியை ஏற்றிய ஷாரூக்கான்…

    இதனால் விஜய்யும் லோகேஷும் மீண்டும் எப்போது இணைவார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் காணப்பட்டது. இதனை பூர்த்தி செய்யும் விதமாக விஜயின் அடுத்த படத்தை லோகேஷ் இயக்கவுள்ளார்.

    இதற்காக கதை மற்றும் திரைக்கதையை வடிவமைக்கும் பணியில் லோகேஷ் கனகராஜ் ஈடுபட்டுள்ளார். அந்த வகையில் இன்னும் 2 மாதங்களுக்கு சோசியல் மீடியா பக்கமே வரமாட்டேன் என்று லோகேஷ் சமீபத்தில் கூறியிருந்தார்.



    மாஸ்டர் படத்தில் வசனம் எழுதிய இயக்குனர் ரத்னகுமார்தான் தளபதி 67-ல் லோகேஷ் உடன் இணைந்து பணியாற்ற உள்ளார். ஆடை, மேயாதமான், குலு குலு ஆகிய படங்களை ரத்னகுமார் இயக்கியுள்ளார்.

    தேசிய கொடியுடன் பிரபலங்கள்... கவனம் பெறும் சுதந்திர தின படங்கள்!

    லோகேஷ் கனகராஜுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ள ரத்னகுமார் 1 முதல் 10 வரையிலான எண்களை பதிவிட்டு அதில் 6 மற்றும் 7 எண்களில் பட்டாசை கொளுத்தி உள்ளார்.

    இதில் 6  மற்றும் 7 என்பதை தளபதி 67 எனவும் பட்டாசு என்பதை தீபாவளி எனவும் பொருள்கொண்டு, வரும் தீபாவளிக்கு தளபதி 67 குறித்த அறிவிப்பு வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
    Published by:Musthak
    First published:

    Tags: Actor Vijay, Lokesh Kanagaraj

    அடுத்த செய்தி