சென்னையில் அதிகரிக்கும் கொரோனா - கவலையில் மாஸ்டர் பட பிரபலம்

சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இயக்குநர் ரத்னகுமார் கவலை தெரிவித்துள்ளார்.

சென்னையில் அதிகரிக்கும் கொரோனா - கவலையில் மாஸ்டர் பட பிரபலம்
கோப்புப்படம்
  • Share this:
நான்காம் கட்ட ஊரடங்கு இன்றுடன் முடிவடையும் நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உலக அளவில் கொரோனா பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் 9-ம் இடத்தில் இருந்த இந்தியா தற்போது எட்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தைப் பொறுத்தவரையில் இதுவரை 22,333 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று மட்டும் 757 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரையில் மொத்தமாக கொரோனா பாதிப்பு குணமடைந்து 12,757 பேர் வீடு திரும்பியுள்ளனர். இன்று 13 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு 173 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று 84 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில் இதுவரை மொத்தமாக 14802 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 7,891 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 129 பேர் உயிரிழந்துள்ளனர். 6,891 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.


இந்நிலையில் சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை நினைத்து கவலை தெரிவித்துள்ளார் இயக்குநர் ரத்னகுமார். இதுகுறித்து தனது ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் அவர், இதயம் நொருங்குவது போன்ற எமோஜியையும், அழுகையை வெளிப்படுத்தும் எமோஜியையும் பதிவிட்டுள்ளார்.ஆடை படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து மாஸ்டர் படத்தில் ரத்னகுமார் பணியாற்றியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: நெட்ஃபிளிக்ஸில் வெளியாகும் அட்லீயின் அடுத்த படம்
First published: May 31, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading