விஜய்யின் அடுத்த படத்தை நான் இயக்கவில்லை - பிரபல இயக்குநர் விளக்கம்!

எவர் ஒருவரிடமும் அவர் அனுமதியில்லாமல் பேசவே விரும்பாதவன் நான். அப்படியிருக்க, நடிகர் விஜய் அவர்களுக்கோ, அவரின் புகழுக்கோ தர்மசங்கடத்தை விளைவிக்க இன்றும், என்றும் விரும்ப மாட்டேன்.

news18
Updated: September 11, 2019, 8:40 PM IST
விஜய்யின் அடுத்த படத்தை நான் இயக்கவில்லை - பிரபல இயக்குநர் விளக்கம்!
விஜய்
news18
Updated: September 11, 2019, 8:40 PM IST
விஜய்யை வைத்து படம் இயக்குவதாக வெளியான தகவலுக்கு பிரபல இயக்குநர் ஒருவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பிகில். ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் பிகில் படத்திலிருந்து இரண்டு பாடல்கள் வெளியாகியுள்ள நிலையில் படம் தீபாவளிக்கு திரைக்கு வரும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிகில் படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கிறார். விஜய்யின் 64-வது படமாக உருவாக இருக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் முதல் துவங்க இருக்கிறது.


லோகேஷ் கனகராஜ் படத்தை முடித்தவுடன் மீண்டும் பேரரசு இயக்கத்தில் விஜய் நடிக்க இருப்பதாகவும், அதனைத் தொடர்ந்து ரமணா இயக்கத்தில் விஜய் நடிக்க முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் இதுதொடர்பாக ரமணா சந்திரசேகர் தனது பேஸ்புக் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.

இயக்குநர் ரமணா


Loading...

அப்பதிவில் கூறியிருப்பதாவது, அச்செய்தியில் துளியும் உண்மையில்லை. நான் எந்த ஒரு பொது ஊடகத்திலும் அப்படி கூறவில்லை. நான் தற்போது நடிகர் விஜய்யை வைத்து படம் இயக்குவதற்கான எந்த ஒரு முயற்சியையும் மேற்கொள்ளவில்லை என்பதையும் இப்பதிவின் மூலம் ஊடகங்களுக்கும், பொது உலகிற்கும் தெரிவித்துக்கொள்கிறேன்.

நான் என் தனிப்பட்ட முயற்சியில் படம் இயக்க இருப்பதும் அதற்கான பணிகள் முழு வேகத்தில் நடந்துகொண்டிருப்பதும் நிஜம். ஆனால், அது விஜய் அவர்களை வைத்து அல்ல.

எவர் ஒருவரிடமும் அவர் அனுமதியில்லாமல் பேசவே விரும்பாதவன் நான். அப்படியிருக்க, நடிகர் விஜய் அவர்களுக்கோ, அவரின் புகழுக்கோ தர்மசங்கடத்தை விளைவிக்க இன்றும், என்றும் விரும்ப மாட்டேன்.
அது விஜய் அவர்களுக்கும் தெரியும்.

இயற்கையும், காலமும் எங்களிடையே அப்படி ஒரு சந்தர்பத்தையும், வாய்ப்பையும் வழங்குமானால் அப்போது அதுகுறித்து நானே அச்செய்தியை வெளியிடும் நேர்மையும், பண்பும் எனக்குண்டு” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் ரமணா விஜய்யை நாயகனாக வைத்து ஆதி, திருமலை ஆகிய இரண்டு படங்களை இயக்கியுள்ளார். கேன்சர் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் இவரை சமீபத்தில் போக்குவரத்து போலீசார் தகாதவார்த்தைகளால் திட்டிய விவகாரம் சர்ச்சைக்குள்ளானதும் குறிப்பிடத்தக்கது.

வீடியோ பார்க்க: கதை அமைந்தால் அஜித் போல நடிப்பேன்: ஜி.வி. பிரகாஷ்

First published: September 11, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...