ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ராம் இயக்கத்தில் நிவின் பாலி நடிக்கும் படத்தின் தலைப்பு இதுதான்..

ராம் இயக்கத்தில் நிவின் பாலி நடிக்கும் படத்தின் தலைப்பு இதுதான்..

நிவின் பாலி - ராம்

நிவின் பாலி - ராம்

கற்றது தமிழ், தங்க மீன்கள், தரமணி ஆகிய படங்களை இயக்கிய ராம், தற்போது நிவின் பாலி நடிக்கும் புதிய திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    இயக்குநர் ராம் இயக்கத்தில் நிவின் பாலி நடித்துள்ள திரைப்படத்திற்கு 7 கடல்  7 மலை என தலைப்பு வைத்துள்ளனர்.

    கற்றது தமிழ், தங்க மீன்கள், தரமணி ஆகிய படங்களை இயக்கிய ராம், தற்போது நிவின் பாலி நடிக்கும் புதிய திரைப்படத்தை இயக்கி வருகிறார். அந்த திரைப்படத்திற்கான வேலைகள் கடந்த ஆண்டு தொடங்கின.

    இருந்தாலும் படத்தின் தலைப்பு அறிவிக்கப்படவில்லை.  இந்த நிலையில் அந்தப் படத்திற்கு 7 கடல் 7 மலை என தலைப்பு வைத்துள்ளனர். இந்த தலைப்பு படத்தின் கதைக்கு பொருத்தமாக இருந்ததால், இதை இறுதி செய்துள்ளனர்.

    முதன்முறையாக தனுஷுடன் ஜோடி சேரும் ராஷ்மிகா மந்தனா…

    இந்த திரைப்படத்தில் நிவின் பாலி உடன்,  அஞ்சலி மற்றும் சூரி ஆகியோர் மிக முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

    ரூ. 6 கோடிக்கு விற்பனையான ‘மாவீரன்’ படத்தின் பாடல் வெளியீட்டு உரிமை…

    அதேபோல் இயக்குநர் ராமின் ஆஸ்தான இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இந்த திரைப்படத்திற்கும் இசையமைக்கிறார். 7 கடல் 7 மலை படத்தின் தலைப்பை வரும் 11ம் தேதி பட குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கின்றனர்.

    Published by:Musthak
    First published:

    Tags: Kollywood