டாஸ்மாக் கடையில் வரிசையில் நிற்கும் பெண்கள் - பிரபல இயக்குநர் கேள்வி
டெல்லி, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் மதுபானக் கடைகளை இன்று முதல் திறக்க உத்தரவு பிறப்பித்தது.

இயக்குநர் ராம்கோபால் வர்மா
- News18 Tamil
- Last Updated: May 4, 2020, 6:19 PM IST
டாஸ்மாக் கடையில் வரிசையில் நிற்கும் பெண்களின் புகைப்படத்தை பதிவிட்டு இன்னும் குடிகார ஆண்களிடமிருந்து பெண்களைக் காக்க வேண்டும் என்று நாம் பேசி வருவதாக ராம் கோபால் வர்மா கருத்து தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் மார்ச் 25-ம் தேதி முதல் ஏப்ரல் 14 வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டு பின்னர் மே 3-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. தற்போது மேலும் 17 -ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கும் சூழ்நிலை தொடர்கிறது.
இதனிடையே சில நிபந்தனைகளுடன் மதுபானக் கடைகளை திறைக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்திருக்கும் நிலையில் டெல்லி, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் மதுபானக் கடைகளை இன்று முதல் திறக்க உத்தரவு பிறப்பித்தது. இதைத்தொடர்ந்து மதுபானக் கடைகளின் முன்பு ஆயிரக்கணக்கான மது பிரியர்கள் ஒன்று கூடினர். அதிகமாக கூட்டம் கூடிய ஒரு சில இடங்களில் போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். கொரோனா காலத்தில் கடைபிடிக்க வேண்டிய சமூக இடைவெளியும் காற்றில் பறக்க விடப்பட்டது.
இந்நிலையில் இயக்குநர் ராம்கோபால் வர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் பெண்கள் மது வாங்க வரிசையில் நிற்கும் புகைப்படத்தை பதிவிட்டு கருத்து தெரிவித்துள்ளார். அதில், பாருங்க யாரு மதுபானக் கடையில் வரிசையில் நிற்கிறார்கள்? இன்னமும் குடிகார ஆண்களிடமிருந்து பெண்களைக் காக்க வேண்டும் என்று பேசுகிறோம்” என்று தெரிவித்துள்ளார் ராம்கோபால் வர்மா.
ராம்கோபால் வர்மாவின் கருத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர். மேலும் இது அவரவரின் தனிப்பட்ட விருப்பம், உரிமை என்றும் பலர் கருத்து பதிவிட்டுள்ளனர்.
கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் மார்ச் 25-ம் தேதி முதல் ஏப்ரல் 14 வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டு பின்னர் மே 3-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. தற்போது மேலும் 17 -ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கும் சூழ்நிலை தொடர்கிறது.
இதனிடையே சில நிபந்தனைகளுடன் மதுபானக் கடைகளை திறைக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்திருக்கும் நிலையில் டெல்லி, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் மதுபானக் கடைகளை இன்று முதல் திறக்க உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில் இயக்குநர் ராம்கோபால் வர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் பெண்கள் மது வாங்க வரிசையில் நிற்கும் புகைப்படத்தை பதிவிட்டு கருத்து தெரிவித்துள்ளார். அதில், பாருங்க யாரு மதுபானக் கடையில் வரிசையில் நிற்கிறார்கள்? இன்னமும் குடிகார ஆண்களிடமிருந்து பெண்களைக் காக்க வேண்டும் என்று பேசுகிறோம்” என்று தெரிவித்துள்ளார் ராம்கோபால் வர்மா.
Look who’s in line at the wine shops ..So much for protecting women against drunk men 🙄 pic.twitter.com/ThFLd5vpzd
— Ram Gopal Varma (@RGVzoomin) May 4, 2020
ராம்கோபால் வர்மாவின் கருத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர். மேலும் இது அவரவரின் தனிப்பட்ட விருப்பம், உரிமை என்றும் பலர் கருத்து பதிவிட்டுள்ளனர்.