• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • மெகா ஸ்டாரின் குடும்பத்தை ஒட்டுண்ணிகள் என்று விமர்சித்த பிரபல இயக்குனர்!

மெகா ஸ்டாரின் குடும்பத்தை ஒட்டுண்ணிகள் என்று விமர்சித்த பிரபல இயக்குனர்!

மெகாஸ்டார் சிரஞ்சீவி

மெகாஸ்டார் சிரஞ்சீவி

இந்த இரு ட்வீட்களும் இரு தெலுங்கு மாநிலங்களிலும் சம்பந்தப்பட்ட ரசிகர்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக பவன் கல்யாணின் ரசிகர்கள் கோபத்தின் உச்சியில் உள்ளனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார், மெகா ஸ்டார் என்றால் அது ஒருவர்தான். சிரஞ்சீவி. அவரது குடும்பத்திலிருந்து டஜன் நடிகர்கள் திரைத்துறைக்கு வந்திருக்கிறார்கள். அவர்களில் முன்னணியில் இருக்கும் சிலரை சிரஞ்சீவியின் வெற்றியை உறிஞ்சி வாழும் ஒட்டுண்ணிகள் என்று விமர்சித்துள்ளார் இயக்குனர் ராம் கோபால் வர்மா.

பிரச்சனைக்குரிய கருத்துக்களை எவ்வித பிரச்சனையும் இல்லாமல் உதிர்க்கக் கூடியவர் ராம் கோபால் வர்மா. அவரது வாயில் யார் அகப்பட்டாலும் அரைத்து துப்பாமல் விட மாட்டார். இப்போது சிக்கியிருப்பது சிரஞ்சீவி குடும்பம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சிரஞ்சீவியின் பிறந்தநாளுக்கு அனைவரும் ஆஜராக, அல்லு அர்ஜுன் மட்டும் வரவில்லை. இது ஆந்திரா, தெலுங்கானாவில் பேசு பொருளானது. அதைத் தொடர்ந்து நேற்று நள்ளிரவு வெளியானது ராம் கோபால் வர்மாவின் ட்விட்டர் அணுகுண்டு

Also read... வெங்கட்பிரபுவின் புதிய படம் - ஒரு நாயகன் மூன்று நாயகிகள்!

"சிரஞ்சீவியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளாத அல்லு அர்ஜுனின் புத்திசாலித்தனம் என்னவென்றால், அவர் ஒரு தானாக உருவான ஸ்டார். அவரால் வருண் தேஜ், சாய் தரம் தேஜ், பவன் கல்யாண், ராம் சரண் போன்ற குடும்ப ஒட்டுண்ணிகளுடன் சேர முடியாது. இவர்கள் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் வெற்றியை உறிஞ்சி வாழுகிறவர்கள்" என்று தனது ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார்.

ராம் கோபால் வர்மா


அத்துடன், "ஒரிஜினல் மெகா ஸ்டார் சிரஞ்சீவிக்குப் பிறகு இப்போதைய ஒரேயொரு மெகா ஸ்டார் அல்லு அர்ஜுன்" என்று இன்னொரு ட்வீட்டும் செய்துள்ளார்.





இந்த இரு ட்வீட்களும் இரு தெலுங்கு மாநிலங்களிலும் சம்பந்தப்பட்ட ரசிகர்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக பவன் கல்யாணின் ரசிகர்கள் கோபத்தின் உச்சியில் உள்ளனர். வேறு யாராவது என்றால் இந்நேரம் அவர்களின் வீடு தாக்கப்பட்டிருக்கும். இது ராம் கோபால் வர்மா. ஏதாவது சொன்னால் அடுத்த ட்வீட் இதைவிட கொடூரமாக வரும்.



ராம் கோபால்வர்மா ஒட்டுண்ணிகள் என்ற ராம் சரண், சிரஞ்சீவியின் மகன். ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் படத்தின் நாயகன். பவன் கல்யாண் சிரஞ்சீவியின் தம்பி. அரசியல், சினிமா என இரண்டிலும் காலூன்றி நிற்பவர். அவர் படம் வெளியாகும் போது தியேட்டர்கள் திருவிழாவாகும். சாய் தரம் தேஜ் சிரஞ்சீவியின் உறவுமுறையில் மருமகன். வருண் தேஜ் சிரஞ்சீவியின் சகோதரியின் மகன். ஒரே ட்வீட்டில் ஒரு மெகா ஸ்டாரின் குடும்பத்தையே கலகலக்க வைத்திருக்கிறார் வர்மா. இதன் பக்க விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை அறிய இரண்டு மாநில ரசிகர்களும் ஆவலுடன் உள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: