இது யார் தெரியுமா? - இயக்குனர் வர்மா வெளியிட்ட காதல் ரகசியம்!

ராம் கோபால் வர்மா

தனது சொந்த வாழ்க்கையை சிலர் திறந்த புத்தகமாக வைத்திருப்பார்கள். வர்மா அந்தப் புத்தகத்தின் ரகசிய பக்கங்களை இதேபோல் பிட் நோட்டீசாக்கி விநியோகிக்கவும் செய்வார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
ராம் கோபால் வர்மா என்ற பெயர் இயக்குனராக ஒருகாலத்தில் புகழின் உச்சியில் இருந்தது. வாரத்துக்கு ஒரு படம் எடுத்து  உயரத்தில் பறந்த தனது கொடியை வர்மாவே அரைக்கம்பத்தில் பறக்கவிட்டார். இப்போது நாளொரு பிரச்சனைகளை சமூக வலைதளத்தில் உருவாக்குவதே அவரது வேலை.

நடிகர் சிரஞ்சீவியின் குடும்பத்திலிருந்து நடிக்க வந்தவர்களை ஒட்டுண்ணிகள் என்று விமர்சித்து, பலரது ரத்தக்கொதிப்பை அதிகப்படுத்தியவர், இது யார் தெரியுமா என்று நீலநிற ஸ்விம் சூட்டில் இருக்கும் நடுத்தர வயது பெண்மணியின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.அந்த பெண்ணின் பெயர் சத்யா என்றும், தான் விஜயவாடா சித்தார்த்தா என்ஜினியரிங் காலேஜில் படித்த போது காதலித்த முதல் பெண் என்றும் வர்மா குறிப்பிட்டுள்ளார். சத்யா இப்போது யுஎஸ்ஸில் இருக்கும் தகவலையும் வெளியிட்டுள்ளார் வர்மா.

Also read... உடன்பிறப்பே என்ன மாதிரியான கதை? - இயக்குனர் விளக்கம்!தனது சொந்த வாழ்க்கையை சிலர் திறந்த புத்தகமாக வைத்திருப்பார்கள். வர்மா அந்தப் புத்தகத்தின் ரகசிய பக்கங்களை இதேபோல் பிட் நோட்டீசாக்கி விநியோகிக்கவும் செய்வார். நான் தினமும் நீலப்படம் பார்ப்பேன், நீலப்படங்களின் நல்ல கலெக்ஷன் என்னிடம் உள்ளது என்று வெளிப்படையாக பேசியவர் வர்மா. அவர் தனது முதல் காதலியின் படத்தை பகிர்ந்ததில் ஆச்சரியமில்லை

கூடுதல் தகவல், வர்மாவின் முன்னாள் காதலி சத்யா, வர்மாவின் நட்பு வட்டத்தில்தான் தற்போது உள்ளார்.
Published by:Vinothini Aandisamy
First published: