Home /News /entertainment /

ராஜூ முருகன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்தின் டைட்டில் அறிவிப்பு

ராஜூ முருகன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்தின் டைட்டில் அறிவிப்பு

ராஜூ முருகன் - கார்த்தி

ராஜூ முருகன் - கார்த்தி

Raju Murugan Karthi : கார்த்தியின் நடிப்பில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல்பாகம் செப்டம்பர் 30-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் கார்த்தி தற்போது பி.எஸ். மித்ரன் இயக்கும் சர்தார் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு இன்னும் 30 நாட்கள் மீதமுள்ளது.

இந்த திரைப் படத்தை முடித்த பிறகு ராஜூமுருகன் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். அதற்கான முதற்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, கதை விவாத பணிகளை இறுதி செய்திருக்கும் படக்குழு, நடிகர்கள் தேர்வு செய்து வருவதாக கூறப்படுகிறது.

அதில் நடிகர் விஜய் சேதுபதியை வில்லனாக நடிக்க வைக்க முயற்சிக்கின்றனர். ஆனால் சம்பள விவகாரத்தில் விஜய் சேதுபதி மற்றும் தயாரிப்பு நிறுவனத்திற்கு இடையே இறுதி முடிவு எடுக்கப்படாமல் உள்ளது. இந்த நிலையில் ராஜூமுருகன் - கார்த்தி கூட்டணியில் உருவாகும் படத்திற்கு ஜப்பான் என தலைப்பு வைத்திருக்கின்றனர்.

இதையும் படிங்க - விஜய்யின் மாஸ்டர் வசூலை முறியடித்த கமலின் விக்ரம்… வசூல் எவ்வளவு தெரியுமா?

கார்த்தியின் நடிப்பில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல்பாகம் செப்டம்பர் 30-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க - Varisu: வாரிசு போஸ்டரில் விஜய் அமர்ந்திருக்கும் பைக் குறித்த சுவாரஸ்ய தகவல்

இரும்புத் திரை வெற்றிப்படத்தை அளித்த பி.எஸ். மித்ரன் இயக்கியுள்ள படம் என்பதால் சர்தார் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கிறார்.
Published by:Musthak
First published:

Tags: Actor Karthi

அடுத்த செய்தி