Home /News /entertainment /

வெற்றிமாறனின் விடுதலை படத்தில் பிரபல இயக்குநர்?

வெற்றிமாறனின் விடுதலை படத்தில் பிரபல இயக்குநர்?

விடுதலை

விடுதலை

விடுதலை படத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    இயக்குநர் வெற்றிமாறனின் விடுதலை படத்தில் பிரபல இயக்குநர் ராஜீவ் மேனன் நடிக்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    வெற்றிமாறன் முழுமையான வெற்றியை பெற்ற இந்திய இயக்குநர்களில் ஒருவர் என்றே சொல்லலாம். தற்போது எழுத்தாளர் ஜெயமோகனின் சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு விடுதலை படத்தை இயக்கி வருகிறார். அதில் சூரி மற்றும் விஜய் சேதுபதி முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள் என்பதை நாம் அனைவரும் அறிவோம்.

    சமீபத்திய தகவலின் படி, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட விடுதலை படத்தில் மூத்த இயக்குனர் ராஜீவ் மேனன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம். விடுதலை படம் இரண்டு பாகங்களாக உருவாகும் என்று ஏற்கனவே செய்திகள் வெளியாகின. முதல் பாகத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும், அடுத்த பாகத்தின் படப்பிடிப்பு 90% முடிந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    ட்விட்டர் கணக்கை டெலீட் செய்த இயக்குநர் வெற்றிமாறன்

    ஒரு பெரிய சண்டைக் காட்சி இரண்டாம் பாகத்தில் நிலுவையில் உள்ளது. அதை ஸ்டண்ட் இயக்குநர் பீட்டர் ஹெய்ன் இயக்கவிருக்கிறார். விடுதலை படத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் தயாரிக்கும் இப்படத்தில் பிரபல இயக்குனர் கவுதம் மேனன் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    Published by:Shalini C
    First published:

    Tags: Director vetrimaran

    அடுத்த செய்தி