Kalyani Menon: இயக்குநர் ராஜீவ் மேனனின் தாயார் பாடகி கல்யாணி மேனன் திடீர் மரணம்

கல்யாணி மேனன்

விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் இடம்பெற்றுள்ள ’ஓ மணப்பெண்ணே’ பாடலை பாடியதோடு, இணை பாடலாசிரியராகவும் பணியாற்றினார்.

  • Share this:
    பிரபல இயக்குநர் ராஜிவ் மேனனின் தாயார் பாடகி கல்யாணி மேனன் உடல் நலக்குறைவால் காலாமானார்.

    தமிழ் மற்றும் மலையாளத்தில் பின்னணி பாடகியாக வலம் வந்தவர் கல்யாணி மேனன். இவர் தமிழில் இளையராஜா இசையில் 1979-ம் ஆண்டு வெளியான ‘நல்லதொரு குடும்பம்’ படத்தில் இடம்பெற்ற ‘செவ்வானமே பொன்மேகமே’ என்ற பாடல் மூலம் அறிமுகமானார்.

    இதனைத் தொடர்ந்து எம்.எஸ்.விஸ்வநாதன், ஏ.ஆர்.ரஹ்மான் போன்ற முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் பல்வேறு பாடல்களை பாடி தமிழ் ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளார். விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் இடம்பெற்றுள்ள ’ஓ மணப்பெண்ணே’ பாடலை பாடியதோடு, இணை பாடலாசிரியராகவும் பணியாற்றினார். கோவிந்த் வசந்தாவின் இசையில் 96 படத்தில் ‘காதலே காதலே’ என்ற பாடலையும் பாடியுள்ளார். இந்நிலையில் கல்யாணி மேனன் கடந்த சில தினங்களாக உடல் நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார், அவருக்கு வயது 80. பாடகி கல்யாணி மேனனுக்கு ராஜீவ் மேனன், கருணாகரன் மேனன் ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்களில் ராஜீவ் மேனன், தமிழ் சினிமாவில் முன்னணி ஒளிப்பதிவாளராகவும், இயக்குநராகவும் உள்ளார். மின்சார கனவு, கண்டுக்கொண்டேன் கண்டுக்கொண்டேன், சர்வம் தாள மயம் உள்ளிட்ட படங்களையும் இயக்கியுள்ளார். இதையடுத்து பாடகி கல்யாணி மேனனின் மறைவுக்கு திரையுலகினர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: