Home /News /entertainment /

அடுத்த படத்தில் தெலுங்கு முன்னணி ஹீரோவை இயக்கப் போகும் ராஜமவுலி…

அடுத்த படத்தில் தெலுங்கு முன்னணி ஹீரோவை இயக்கப் போகும் ராஜமவுலி…

எஸ்.எஸ்.ராஜமெளலி

எஸ்.எஸ்.ராஜமெளலி

இந்த திரைப்படம் ஜேம்ஸ் பாண்ட் மற்றும் இந்தியானா ஜோன்ஸ் சாயலில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்திற்கான பணிகளை ராஜமவுலி தொடங்கியுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
தனது அடுத்த படத்தில் தெலுங்கு முன்னணி ஹீரோவை இயக்குனர் ராஜமவுலி இயக்கவுள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

ராஜமவுலி இயக்கத்தில் வெளிவந்த ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் பிரமாண்ட வெற்றியை பெற்றுள்ளது. உலகம் முழுவதும் இந்தப் படம் ரூ. 1200 கோடி அளவிற்கு வசூல் செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தனது முந்தைய படங்களை மிஞ்சும் அளவுக்கு ராஜமவுலி தனது அடுத்தடுத்த படங்களை உருவாக்கி வருகிறார். இதனால் இந்திய சினிமாவின் முன்னணி கமர்ஷியல் பட இயக்குனராக மாறியுள்ளார் ராஜமௌலி.

மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரையில் இருந்து கிளம்பிய ஜோடி.. ரசிகர்கள் வருத்தம்!

இந்நிலையில் ராஜமவுலி இயக்கும் அடுத்த படத்தின் ஹீரோ குறித்த தகவல் வெளிவந்துள்ளது. இதுதொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில் மகேஷ்பாபுவுடன் இணையும் படம் ஆக்ஷன் அட்வென்ச்சர் ஜானரில் உருவாகும் என்று கூறியுள்ளார்.

இந்த திரைப்படம் ஜேம்ஸ் பாண்ட் மற்றும் இந்தியானா ஜோன்ஸ் சாயலில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்திற்கான பணிகளை ராஜமவுலி தொடங்கியுள்ளார். மொத்தம் 2 கதைகள் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. விரைவில் கதை இறுதி செய்யப்பட்டு அடுத்த கட்ட பணிகள் தொடங்கும் என்று ராஜமவுலி கூறியுள்ளார்.

ராஜமவுலி - மகேஷ் பாபு


இந்த திரைப்படம் மகேஷ்பாபு உடைய 29-ஆவது படம் ஆகும். வழக்கம்போல ராஜமவுலியின் அடுத்த படத்திற்கான கதையை அவரது தந்தை விஜயேந்திர பிரசாத் வடிவமைக்கிறார்.

தற்போது மகேஷ்பாபு திரிவிக்ரம் இயக்கத்தில் தனது 28-ஆவது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
Published by:Musthak
First published:

Tags: Rajamouli

அடுத்த செய்தி