ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ஹாலிவுட் இயக்குனர் பஸ்டர் கீடன் படத்தை காப்பியடித்த ராஜமௌலி

ஹாலிவுட் இயக்குனர் பஸ்டர் கீடன் படத்தை காப்பியடித்த ராஜமௌலி

பஸ்டர் கீட்டோன் - ராஜமவுலி

பஸ்டர் கீட்டோன் - ராஜமவுலி

பஸ்டர் கீடன் போன்ற திறமைசாலிகளைப் பற்றி உலகம் இன்னும் அதிகமாக பேச வேண்டும், அவரது படங்களை பார்க்க,வேண்டும், அவரைப் போன்றவர்களை உருவாக்க வேண்டும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ராஜமௌலியின் முதல் படம் ஸ்டுடன்ட் நம்பர் 1 இல், ஜுனியர் என்டிஆர் நடித்தார். 2001 இல் படம் வெளியாகி வெற்றி பெற்றது. அதற்கடுத்து எடுத்த சிம்காத்ரியிலும் ஜுனியர் என்டிஆர்தான் ஹீரோ.

தொடர்ந்து நிதின் (சை), பிரபாஸ் (சத்ரபதி), ரவி தேஜா (விக்ரமார்க்குடு), ஜுனியர் என்டிஆர் (யமதொங்கா), ராம் சரண் (மகாதீரா) என முன்னணி நட்சத்திரங்களை வைத்து படம் எடுத்தார். எல்லா படங்களும் ஹிட்.

முன்னணி நட்சத்திரங்களை வைத்து படமெடுப்பதால்தான் ராஜமௌலி ஹிட் கொடுக்கிறார் என இன்டஸ்ட்ரியில் பேச ஆரம்பித்தார்கள். அவரது உழைப்புக்கான கிரெடிட்டை ஹீரோக்களுக்கு கொடுத்தனர். இது ஒரு சவாலாக மாற, முன்னணி ஹீரோக்கள் இல்லாமலே ஹிட் கொடுக்க முடியும் என்று காட்ட நினைத்தார் ராஜமௌலி.

தெலுங்கின் காமெடி நடிகர்களில் ஒருவரான சுனிலை நாயகனாக்கி தனது அடுத்தப் படம் கல்யாண ராமண்ணாவை எடுத்தார். படம் முந்தைய படங்கள் போலவே ஹிட்டானது.

ஹீரோக்கள் இல்லாமலும் தன்னால் ஹிட் தர முடியும் என்பதை  படம் எடுத்து பறைசாற்றினார் ராஜமௌலி.

ஆனால், இதுவொரு காப்பி திரைப்படம். 1923 ஹாலிவுட்டில் பஸ்டர் கீடன் இயக்கி, நடித்த அவர் ஹாஸ்பிடாலிட்டி படத்தை அப்படியே தழுவி ராஜமௌலி எடுத்ததுதான் கல்யாண ராமண்ணா.

இதை தமிழில் சந்தானம் நடிப்பில் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற பெயரில் எடுத்தனர். இந்தியில் வெளிவந்த சன் ஆஃப் சர்தாரும் கல்யாண ராமண்ணாவின் ரீமேக்தான்.

அவர் ஹாஸ்பிடலிட்டியில் பஸ்டர் கீடனுக்கு அவரது அப்பா வழியில் ஒரு எஸ்டேட் சொந்தமாகும். அதற்குரிய கடிதம் கிடைத்ததும் எஸ்டேட்டை பார்க்கக் கிளம்புவார்.

ரயிலில் அவர் செல்கையில் ஒரு பெண்ணை சந்திப்பார். அவளை அவளது அப்பாவும், இரண்டு சகோதரர்களும் ரயில் நிலையத்தில் வரவேற்பார்கள். அதில் ஒருவனிடம் பஸ்டர் கீடன் எஸ்டேட் குறித்து கேட்பார்.

அவருக்கு அவர்கள் தந்தையின் எதிரிகள் என்பது தெரியாது. பஸ்டர் கீடனை சுடுவதற்கு அந்தப் பெண்ணின் சகோதரன் துப்பாக்கி தேடும் நேரத்தில் பஸ்டர் கீடன் அவர்களின் வீட்டிற்கு சென்று விடுவார். அவர்கள் வீட்டிற்கு வரும் விருந்தாளிகளை கொல்வதில்லை.

அதனால், அவர் வீட்டைவிட்டு வெளியேற காத்திருப்பார்கள். இந்த விஷயம் தெரிந்த பஸ்டர் கீடன் வீட்டைவிட்டு வெளியேற மாட்டார்.

கடைசியில் பெண் வேடமிட்டு குதிரையில் தப்பிச் சென்று, மலைமீது மாட்டிக் கொள்வார். சில பல சாகஸங்களுக்குப் பின் படம் சுபமாக முடியும்.

அந்தக் கதையை அப்படியே அடித்திருப்பார் ராஜமௌலி. அவர் ஹாஸ்பிடலிட்டியை தமிழில் செய்ய ஐம்பதுகளின் இறுதியில் முயற்சி நடந்தது. அந்த கதைவிவாதத்தில் இடம்பெற்றவரின் மகன் மூலம்தான் அவர் ஹாஸ்பிடலிட்டி படம் குறித்து  ராஜமௌலி டீம் அறிந்து கொண்டது என்பது இன்டஸ்ட்ரி டாக்.

பஸ்டர் கீடன் சார்லி சாப்ளினின் முன்னோடி. அவரது படங்களில் வரும் சாகஸக் காட்சிகளை இன்றுகூட எடுப்பது கடினம்.

அவர் ஹாஸ்பிடாலிட்டி படத்தில் வரும் ரயில் செல்லும் காட்சியை எப்படி படமாக்கினார்கள் என்பது இப்போதும் ஆச்சரியமாக இருக்கும். சாகஸமும், சிரிப்பும் நிறைந்த பயணம் அது. அந்த போர்ஷனை மட்டும் எடிட் செய்து வாட்ஸப்பில் முன்பு பரப்பி வந்தார்கள்.

பஸ்டர் கீடன் போன்ற திறமைசாலிகளைப் பற்றி உலகம் இன்னும் அதிகமாக பேச வேண்டும், அவரது படங்களை பார்க்க,வேண்டும், அவரைப் போன்றவர்களை உருவாக்க வேண்டும். ஐ

ந்து நாள்கள் முன்புதான்  அவரது 128 வது பிறந்தநாள் வந்தது. அவர் ஹாஸ்பிடாலிட்டி யூடியூபில் உள்ளது. குழந்தைகளோடு பார்க்க சிறந்த படம்.

Published by:Musthak
First published: