இயக்குநர் சங்கத் தேர்தலில் ஆர்.கே.செல்வமணி வெற்றி!

news18
Updated: July 21, 2019, 5:55 PM IST
இயக்குநர் சங்கத் தேர்தலில் ஆர்.கே.செல்வமணி வெற்றி!
ஆர்.கே.செல்வமணி
news18
Updated: July 21, 2019, 5:55 PM IST
தமிழ்த் திரைப்பட இயக்குநர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஆர்.கே.செல்வமணி வெற்றி பெற்றுள்ளார்.

2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கத்திற்கான தேர்தல் சென்னை வடபழனியில் உள்ள திரைப்பட இசை கலைஞர்கள் சங்க வளாகத்தில் இன்று காலை 7 மணி தொடங்கி 4 மணி வரை நடைபெற்றது. சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் செந்தில்நாதன் தேர்தல் அலுவலராக நியமிக்கப்பட்டு தேர்தல் நடைபெற்றது.

தலைவர், இரண்டு துணைத்தலைவர், நான்கு இணை செயலாளர்கள் மற்றும் 12 செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பொறுப்புகளுக்கு இந்த தேர்தல் நடைபெற்றது. தலைவர் பதவிக்கு ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட பாரதிராஜா நூறாவது பொதுக்குழுவில் பலர் எதிர்ப்பு தெரிவித்ததால், தனது பதவியை ஏற்க மறுத்தார்.


இந்த நிலையில் இயக்குநர் ஆர்.கே.செல்வமணியும், வித்யாசாகரும் தலைவர் பதவிக்கு போட்டியிட்டனர். பொதுச்செயலாளர் பதவிக்கு ஆர்.வி உதயகுமாரும், பொருளாளர் பதவிகளுக்கு இயக்குனர் பேரரசுவும் ஏற்கனவே போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

4 மணிக்கு தேர்தல் முடிவடைந்த நிலையில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. மொத்தம் பதிவான 1503 வாக்குகளில் 1386 வாக்குகள் பெற்று ஆர்.கே.செல்வமணி வெற்றி பெற்றார்.

ஆர்.கே.செல்வமணியை எதிர்த்து போட்டியிட்ட வித்யாசாகர் 100 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.
First published: July 21, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...