ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

''மேடம் வேண்டாம்.. லைலான்னு கூப்பிடுங்க'' - கலகலன்னு பேசிய மித்ரன்.. விழுந்து சிரித்த லைலா!

''மேடம் வேண்டாம்.. லைலான்னு கூப்பிடுங்க'' - கலகலன்னு பேசிய மித்ரன்.. விழுந்து சிரித்த லைலா!

பி.எஸ். மித்ரன் - லைலா

பி.எஸ். மித்ரன் - லைலா

தீபாவளியையொட்டி வரும் வெள்ளியன்று சர்தார் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இந்தப்படத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் உளவாளி என இரண்டு கேரக்டர்களில் கார்த்தி நடித்துள்ளார்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    கார்த்தி நடித்த ‘சர்தார்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் இயக்குனர் மித்ரன், நடிகை லைலா குறித்து பேசியது வைரலாகி வருகிறது.

    கார்த்தி, ராஷி கன்னா, லைலா உள்ளிட்டோர் நடிப்பில், பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் ‘சர்தார்’ திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் இந்த படத்தை வெளியிடுகிறது.

    தீபாவளியையொட்டி வரும் வெள்ளியன்று சர்தார் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இதையொட்டி சமீபத்தில் இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் படக்குழுவினர் பங்கேற்றிருந்தனர்.

    இது என்ன மாயம் முதல் அண்ணாத்த வரை கீர்த்தி சுரேஷின் ஹிட் சாங்ஸ்!

    விழாவில் லைலா குறித்து பி.எஸ். மித்ரன் கலகலப்பாக பேசினார். ‘லைலாவுக்கு போன் செய்து லைலா மேம் உங்களிடம் சர்தார் படம் குறித்து பேச வேண்டும்’ என்றேன். அவர் ‘என்னை லைலா மேம் என்று என்று அழைக்காதீர்கள்; லைலா என்று மட்டுமே அழையுங்கள்’ என்றார். பதிலுக்கு நான் அவரிடம், ‘உங்களை மேம் என்று கூப்பிடாமல் இருக்க முடியாது’ என்றேன். ‘அப்படி என்றால் உங்களை மித்ரன் சார் என்று அழைப்பேன்’ என லைலா கூறினார். ஷூட்டிங்கில் ஒவ்வொரு முறையும் சார் சார் என்று என்னை லைலா கிண்டல் செய்வார்.

    சோவியத் யூனியனில் 3.48 கோடி பேர் பார்த்த தேவரின் யானை படம்

    இவ்வாறு இயக்குனர் பிஎஸ் மித்ரன் பேச, அதைக் கேட்டுக் கொண்டிருந்த லைலா விழுந்து விழுந்து சிரித்தார். இது தொடர்பான வீடியோ காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.

    சர்தார் படத்தின் ட்ரெய்லருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தப்படத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் உளவாளி என இரண்டு கேரக்டர்களில் கார்த்தி நடித்துள்ளார்.

    Published by:Musthak
    First published:

    Tags: Kollywood