ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

சினிமா பத்திரிக்கையாளரை மணக்கும் கார்த்தியின் சர்தார் பட இயக்குநர் - குவியும் வாழ்த்துகள்!

சினிமா பத்திரிக்கையாளரை மணக்கும் கார்த்தியின் சர்தார் பட இயக்குநர் - குவியும் வாழ்த்துகள்!

பி.எஸ்.மித்ரன் நிச்சயதார்த்தம்

பி.எஸ்.மித்ரன் நிச்சயதார்த்தம்

நிச்சயதார்த்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ள நிலையில், ரசிகர்கள் பலர் மித்ரனுக்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

தமிழ் சினிமாவின் குறிப்பிடத் தகுந்த இயக்குநராக வலம் வரும் பி.எஸ்.மித்ரனின் திருமண நிச்சயதார்த்தம் நடைப்பெற்றுள்ளது. 

'இரும்புத்திரை' மற்றும் 'ஹீரோ' ஆகியப் படங்களை இயக்கிய தமிழ் இயக்குனர் பி.எஸ்.மித்ரன் விரைவில் திருமணம் செய்ய உள்ளார். விஷால் நடித்த 'இரும்புத்திரை' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான இவருக்கும், சினிமா பத்திரிகையாளர் ஆஷாமீரா ஐயப்பனுக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்ட அவர்களின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ள நிலையில், ரசிகர்கள் பலர் மித்ரனுக்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

'இன்று நேற்று நாளை' பட இயக்குனர் ரவிக்குமார் மித்ரன் - ஆஷாமீரா நிச்சயதார்த்தத்தில் புது ஜோடிகளுடன் எடுத்துக் கொண்ட படத்தை ட்விட்டரில் பகிர்ந்து அவர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

திருமணத்தை நடத்திய புரோகிதர்களுக்கு நயன்தாரா விக்னேஷ் சிவன் கொடுத்த சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதற்கிடையில், இயக்குனர் பி.எஸ்.மித்ரன் தற்போது கார்த்தி நடிக்கும் 'சர்தார்' படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் ராஷி கண்ணா, சங்கி பாண்டே, லைலா, ரஜிஷா விஜயன், முரளி சர்மா மற்றும் ராஜு ஜெயமோகன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார்கள். ஸ்பை த்ரில்லராக உருவாகி வரும் இப்படம் 2022 தீபாவளிக்கு வெளியாகிறது.

First published:

Tags: Tamil Cinema