Home /News /entertainment /

கோமாளி பட இயக்குநர் பிரதீப் ரங்கநாதனின் புதிய படத்திற்கு லவ் டுடே என தலைப்பு!

கோமாளி பட இயக்குநர் பிரதீப் ரங்கநாதனின் புதிய படத்திற்கு லவ் டுடே என தலைப்பு!

பிரதீப் ரங்கநாதன்

பிரதீப் ரங்கநாதன்

ரஜினிகாந்தின் படங்களை தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளியான பழைய திரைப்படங்களின் தலைப்பை புதிய படங்களுக்கு வைக்கத் தொடங்கியுள்ளனர். 

கோமாளி படத்தின் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடித்து இயக்கும் படத்திற்கு லவ் டுடே என தலைப்பு வைத்துள்ளனர். 

ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகி வெற்றியடைந்த கோமாளி திரைப்படத்தை பிரதீப் ரங்கநாதன் இயக்கியிருந்தார். இவர் தற்போது ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தை இயக்கி, அதில் நாயகனாகவும் நடித்துள்ளார்.

அந்தப் படத்திற்கான இறுதிக்கட்ட வேலைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. ஆனால் படத்தின் தலைப்பை இதுவரை அறிவிக்காமல் இருந்தனர். இந்த நிலையில் பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடித்துள்ள அந்தப் படத்திற்கு லவ் டுடே என தலைப்பு வைத்துள்ளனர். இதே தலைப்பில் விஜய் நடிப்பில் 1997-ஆம் ஆண்டு ஒரு திரைப்படம் வெளியாகி வெற்றியடைந்தது. தற்போது அந்த தலைப்பை தன்னுடைய திரைப்படத்திற்கு பிரதீப் ரங்கநாதன் தேர்வு செய்திருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கம்பீரமாக விக்ரம்... வரவேற்பைப் பெறும் பொன்னியின் செல்வன் ஆதித்ய கரிகாலன் லுக்!

படத்தின் தலைப்பை தற்போது அறிவிக்கும் எண்ணத்தில் இல்லாமல் இருந்துள்ளனர் படக்குழுவினர். ஆனால் கதிர் மற்றும் திவ்ய பாரதி இணைந்து நடிக்கும் ஒரு படத்திற்கு இதே தலைப்பை வைக்க திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியானது. இதனால் லவ் டுடே படத்தின் தயாரிப்பு நிறுவனத்திடம் பேசி உரிமையை பெற்று உடனடியாக தலைப்பை அறிவித்துள்ளனர் ஏ.ஜி.எஸ் நிர்வாகத்தினர்.



இளைஞர்கள் கட்டாயம் பார்க்க வேண்டும்... மாதவனின் ராக்கெட்ரி படத்தை பாராட்டிய ரஜினிகாந்த்!

தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படிக்காதவன், வேலைக்காரன், மாப்பிள்ளை போன்ற திரைப்படங்களின் தலைப்புகள் மீண்டும் வைக்கப்பட்டு புதிய திரைப்படங்கள் வெளியாகின. இந்த நிலையில் தற்போது விஜய்யின் நடிப்பில் வெளியான பழைய திரைப்படங்களின் தலைப்பை, புதிய திரைப்படங்களுக்கு வைக்க தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 
Published by:Shalini C
First published:

Tags: Actor Thalapathy Vijay, Tamil Cinema

அடுத்த செய்தி