ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

தவறு செய்துவிட்டேன்... சமூக வலைதள சர்ச்சை பதிவுகளுக்கு பிரதீப் ரங்கநாதன் விளக்கம்

தவறு செய்துவிட்டேன்... சமூக வலைதள சர்ச்சை பதிவுகளுக்கு பிரதீப் ரங்கநாதன் விளக்கம்

பிரதீப் ரங்கநாதன்

பிரதீப் ரங்கநாதன்

ஒரு வார்த்தையை மாற்றினால் கூட பல விஷயங்கள் மாறும் என்பதால் பேஸ்புக் கணக்கு Deactivate செய்யப்பட்டது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  நான் தவறு செய்துவிட்டேன், வயதுக்கு ஏற்ப நாம் அனைவரும் வளர்ந்து வளர்ந்து தான் ஒவ்வொன்றையும் கற்றுக் கொள்கிறோம் என லவ் டுடே பட இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் தெரிவித்துள்ளார். 

  நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான 'கோமாளி' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து சமீபத்தில் வெளியான 'லவ் டுடே' படத்தை இயக்கி அதில் ஹீரோவாகவும் நடித்திருந்தார் பிரதீப். ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற இப்படம் வசூலிலும் சாதனை படைத்து வருகிறது. தமிழில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தெலுங்கிலும் லவ் டுடே வெளியாகவிருக்கிறது.

  இதற்கிடையில் பிரதீப்பின் பழைய சமூக வலைதள பதிவுகள் வைரலாக ஆரம்பித்திருக்கின்றன. 2011-ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியை விமர்சித்தும், 2014-ஆம் ஆண்டு விஜய்யின் ஜில்லா படத்தை விமர்சித்தும் அவர் பதிவிட்ட பதிவுகள் ரசிகர்களை கோபமடைய வைத்துள்ளது. லவ் டுடே படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள நிலையில், யுவன் Waste, Fraud என விமர்சித்த பதிவு அவரது ரசிகர்களை எரிச்சலடைய செய்துள்ளது.

  இந்நிலையில் இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரதீப் ரங்கநாதன், ”அதிகம் பரவி வரும் பதிவுகள் ஃபோட்டோஷாப் செய்யப்பட்டவை. ஒரு வார்த்தையை மாற்றினால் கூட பல விஷயங்கள் மாறும் என்பதால் பேஸ்புக் கணக்கு Deactivate செய்யப்பட்டது. விஷயங்களை மாற்ற முயற்சிப்பவர்கள் மீது எனக்கு கோபம் இல்லை. பதிலாக மக்கள் என்னை எவ்வளவு ஆதரிக்கிறாரகள் என்பதை காட்டியதற்காக அவர்களுக்கு நன்றி கூறுகிறேன்.

  முற்றுப்புள்ளி வைக்க விரும்பிய உதயநிதி... முடிவை மாற்றிய கமல் ஹாசன்!

  மேலும் அதில் சில பதிவுகள் உண்மையானவை. ஆனால் Cuss Words கொண்டு இருக்கும் பதிவுகள் போலியானவை. நான் தவறு செய்து விட்டேன். வயதுக்கு ஏற்ப நாம் அனைவரும் வளர்ந்து கற்றுக் கொள்கிறோம். நான் அதை சரி செய்ய முயற்சித்தேன். நான் இன்னும் ஒவ்வொரு நாளும் சிறந்த மனிதனாக மாற முயற்சிக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

  Published by:Shalini C
  First published:

  Tags: Tamil Cinema