• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • மணிரத்னத்தால் மனமுடைந்தேன் - இயக்குனர் பொன்ராம்!

மணிரத்னத்தால் மனமுடைந்தேன் - இயக்குனர் பொன்ராம்!

இயக்குனர் பொன்ராம்

இயக்குனர் பொன்ராம்

ஆந்தாலஜியில் நகைச்சுவை ரசத்துக்கான கதையை பொன்ராம் இயக்கினார். கௌதம் கார்த்திக் முக்கிய வேடத்தில் நடித்தார். இறுதியில் பொன்ராம் படத்தை நீக்கிவிட்டு ப்ரியதர்ஷன் இயக்கிய படம் இடம்பெற்றது.

  • News18
  • Last Updated :
  • Share this:
நவரசா ஆந்தாலஜியில் தான் இயக்கிய படம் இடம்பெறாமல் போனதால், அதில் பணியாற்றிய அனைவரும் மணமுடைந்து போனோம் என இயக்குனர் பொன்ராம் கூறியுள்ளார். 

மணிரத்னமும், ஜெயேந்திராவும் இணைந்து தயாரித்த நவரசா ஆந்தாலஜி நெட்பிளிக்ஸில் வெளியானது நினைவிருக்கும். ஒன்பது ரசங்களை குறிக்கும்வகையில் ஒன்பது பேர் ஒன்பது கதைகளை இயக்கியிருந்தனர். இதில் பணியாற்றிய அனைவரும் ஊதியம் வாங்காமல் வேலை பார்த்தனர். படத்தின் மூலம் கிடைத்த பணம் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட 12,000 திரைப்பட தொழிலாளர்களுக்கு ஆறு மாதங்கள் தவணைமுறையில் அளிக்கப்பட்டது

இந்த ஆந்தாலஜியில் நகைச்சுவை ரசத்துக்கான கதையை பொன்ராம் இயக்கினார். கௌதம் கார்த்திக் முக்கிய வேடத்தில் நடித்தார். இறுதியில் பொன்ராம் படத்தை நீக்கிவிட்டு ப்ரியதர்ஷன் இயக்கிய படம் இடம்பெற்றது. இது பொன்ராம் மற்றும் அதில் பணியாற்றியவர்களுக்கு கடும் ஏமாற்றமாக அமைந்தது. பொன்ராமின் படம் நிராகரிக்கப்பட்டதற்கான காரணம் இதுவரை தெரியாமலிருந்தது

Also read... புதிய போஸ்டர், டீஸருடன் தொடங்கும் கமலின் பிறந்தநாள் கொண்டாட்டம்!

இந்நிலையில், பிரபல நாளிதளுக்கு பேட்டியளித்த பொன்ராம், "ஆடியோவில் பிரச்சனை இருந்ததால் நான் இயக்கிய படத்தை தேர்வு செய்யவில்லை என்றார் மணிரத்னம். அவரது விளக்கம் எனக்கு திருப்திகரமாக இல்லை. இன்றுவரை என்னுடைய படம் நிராகரிக்கப்பட்டதற்கான காரணம் என்ககு தெரியாது. அனைவரும் அந்தப் படத்துக்காக உண்மையாக உழைத்தோம். ஆனால், கடைசியில் மனமுடைந்து போனோம் " என்று கூறியுள்ளார்.

பொன்ராம் இயக்கத்தில் எம்ஜிஆர் மகன் திரைப்படம் நேற்று முன்தினம் டிஸ்னி ஓடிடி தளத்தில் வெளியானது. அதனைப் பார்க்கும் ரசிகர்கள், ஆந்தாலஜியில் பொன்ராம் படம் இடம்பெறாததை இழப்பாக கருத வாய்ப்பில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: