முந்தானை முடிச்சு படத்தால் படுத்த முருங்கை வியாபாரம்... பாக்யராஜ் இழப்பீடு தரவேண்டும் - இயக்குநர் பேரரசு கிண்டல்

முந்தானை முடிச்சு படத்தால் படுத்த முருங்கை வியாபாரம்... பாக்யராஜ் இழப்பீடு தரவேண்டும் - இயக்குநர் பேரரசு கிண்டல்
வீராபுரம்
  • News18
  • Last Updated: September 14, 2019, 11:48 AM IST
  • Share this:
இயக்குநர் கே.பாக்யராஜின் முந்தானை முடிச்சு திரைப்படத்தால், தன்னுடைய முருங்கைக்காய் வியாபாரத்திற்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டதாக திரைப்பட இயக்குநர் பேரரசு நகைச்சுவையாக குறிப்பிட்டார்.

சென்னை வடபழனி பிரசாத் ஸ்டுடியோ அரங்கில், வீராபுரம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில், இயக்குநர் பாக்யராஜ், ஆர்.வி. உதயகுமார், பேரரசு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதில் பேசிய இயக்குநர் பேரரசு, தங்கள் குடும்பம் முருங்கைக்காய் வியாபாரம் செய்துவந்ததாகவும், முந்தானை முடிச்சு திரைப்படம் வெளியான பிறகு வெளிப்படையாக பலர் முருங்கைக்காய் வாங்கவே மறுத்துவிட்டதாகவும் பேசினார். தொடர்ந்து பேசிய அவர், பாக்யராஜால் தங்களின் முருங்கைக்காய் வியாபாரத்திற்கு பெரும் இழப்பு ஏற்பட்டதாகவும், இதற்கு வட்டியுடன் சேர்த்து பாக்யராஜ் இழப்பீடு வழங்கவேண்டும் எனவும் கிண்டலாக குறிப்பிட்டார்


1983-ம் ஆண்டு வெளிவந்த கே.பாக்யராஜின் முந்தானை முடிச்சு திரைப்படத்தில் இடம்பெற்ற முருங்கைக்காய் காட்சியை யாரும் எளிதில் மறந்துவிட முடியாது. இதில், முருங்கைக்காயின் மகத்துவத்தை தனக்கே உரித்தான பாணியில் அழகாக விவரித்திருப்பார் இயக்குநர் பாக்யராஜ்.

Also watch

First published: September 14, 2019, 11:42 AM IST
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading