என் வாழ்க்கையை மாற்றியவர் சசிகுமார் - பாண்டிராஜ் நெகிழ்ச்சி

என் வாழ்க்கையை மாற்றியவர் இயக்குநர் சசிகுமார் என்று பாண்டிராஜ் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

என் வாழ்க்கையை மாற்றியவர் சசிகுமார் - பாண்டிராஜ் நெகிழ்ச்சி
இயக்குநர் சசிகுமார் | பாண்டிராஜ்
  • News18 Tamil
  • Last Updated: September 29, 2020, 5:43 PM IST
  • Share this:
தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளராக வலம் வரும் சசிகுமார் நேற்று பிறந்தநாள் கண்டார். அவருக்கு திரைத்துறை பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிலையில் சசிகுமார் தயாரிப்பில் வெளியான ‘பசங்க’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகி முன்னணி நடிகர்களை இயக்கிய பாண்டியராஜ், சசிகுமாருக்கு நெகிழ்ச்சியுடன் பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது, “உங்கள் வாழ்க்கையை மாற்றிய நபரை, உங்கள் கனவுக்கு உயிர் கொடுத்தவரை, வலி மிகுந்த காலங்களில் உங்களிடம் அக்கறை செலுத்தியவரை என்னவென்று அழைப்பீர்கள்.





முதலாளி, நண்பர், அக்கறையுடன் கவனித்துக் கொள்பவர், நலம் விரும்பி என் வாழ்க்கையில் இந்த அனைத்தையும் இயக்குநர் சசிகுமார் செய்துள்ளார்.” என்று கூறியிருக்கும் பாண்டிராஜ், ‘பசங்க’ படத்துக்காக தேசிய விருது பெற்ற புகைப்படத்தையும் அதில் இணைத்துள்ளார்.



சிவகார்த்திகேயனின் ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகர் சூர்யாவிடம் பாண்டிராஜ் கதை சொல்லியிருப்பதாக கூறப்படுகிறது. ‘பசங்க 2’ படத்துக்குப் பின்னர் மீண்டும் இந்தக் கூட்டணி இணையுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
First published: September 29, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading