விஸ்வாசம் பாடல் மாதிரி கேட்டேன்... இந்தப் பாடல் கிடைத்தது - இயக்குநர் பாண்டிராஜ்

news18
Updated: September 11, 2019, 8:13 PM IST
விஸ்வாசம் பாடல் மாதிரி கேட்டேன்... இந்தப் பாடல் கிடைத்தது - இயக்குநர் பாண்டிராஜ்
நம்ம வீட்டுப் பிள்ளை
news18
Updated: September 11, 2019, 8:13 PM IST
விஸ்வாசம் படத்தின் கண்ணான கண்ணே பாடல் மாதிரி ஒரு பாடல் கேட்டேன் உன்கூடவே பொறக்கணும் பாடலை இமான் கொடுத்தார் என்று இயக்குநர் பாண்டிராஜ் கூறியுள்ளார்.

கடைக்குட்டி சிங்கம் படத்தை அடுத்து பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் படம் நம்ம வீட்டுப் பிள்ளை. சன் பிக்சர்ஸ் பிரமாண்டமாக தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக அனு இம்மானுவேல் நடித்துள்ளார். இவர்களுடன் ஐஸ்வர்யா ராஜேஷ், பாரதிராஜா, யோகி பாபு, சூரி உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இமான் இசையில் படத்தின் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. படத்தின் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் செப்டம்பர் 27-ம் தேதி படம் திரைக்கு வரும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள உன் கூடவே பொறக்கணும் பாடலின் லிரிக் வீடியோ இன்று வெளியாகியுள்ளது. இந்தப் பாடல் குறித்து ட்வீட் செய்திருக்கும் படத்தின் இயக்குநர் பாண்டிராஜ், “கண்ணான கண்ணே மாதிரி ஒரு பாடல் வேணும் சார்னு கேட்டதுக்கு டியூன் போடும்போதே அழுதுகிட்டே கேட்ட பாடல் . எனக்கு மிகவும் பிடித்த பாடல்” என்று கூறியுள்ளார்.வீடியோ பார்க்க: அடுத்து என்ன செய்ய போகிறார் ரஞ்சித்?

First published: September 11, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...