சிவகார்த்திகேயன் பட ஃபர்ஸ்ட் லுக் எப்போது? - பாண்டிராஜ் பதில்!

Web Desk | news18
Updated: July 18, 2019, 5:36 PM IST
சிவகார்த்திகேயன் பட ஃபர்ஸ்ட் லுக் எப்போது? - பாண்டிராஜ் பதில்!
சிவகார்த்திகேயனுடன் இயக்குநர் பாண்டிராஜ்
Web Desk | news18
Updated: July 18, 2019, 5:36 PM IST
சிவகார்த்திகேயனின் ‘SK16'  பட ஃபர்ஸ்ட் லுக் குறித்த கேள்விக்கு இயக்குநர் பாண்டிராஜ் பதிலளித்துள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயன் பாண்டிராஜ் இயக்கத்தில் ‘SK16’ படத்திலும், ‘இரும்புத்திரை’ பட இயக்குநர் மித்ரன் இயக்கத்தில் ஹீரோ படத்திலும், ‘இன்று நேற்று நாளை’ பட இயக்குநர் ராம்குமார் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இந்த 3 இயக்குநர்களுடன் ட்விட்டரில் உரையாடிய சிவகார்த்திகேயன், படத்தைப் பற்றி எதாவது அப்டேட் கொடுங்கப்பா? என்று நகைச்சுவையாக கேள்வி எழுப்பினார். அதற்கு ராம்குமார், மற்றும் மித்ரன் ஆகிய இருவரும் பாண்டிராஜ் அண்ணன் படம் தான் முதலில் வரும் அவரிடம் கேளுங்கள் என்று கூறினர்.


இதற்கு பதிலளித்த இயக்குநர் பாண்டிராஜ், படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறேன். ஃபர்ஸ்ட் லுக் தயாராகிக் கொண்டிருக்கிறது. 2 அல்லது 3 வாரங்களில் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் பண்ணிடலாம் என்று பதிலளித்துள்ளார்.பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் SK16 படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அனு இம்மானுவேல் நடிக்கிறார். இவர்களுடன் பாரதிராஜா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சீமராஜா படத்தைத் தொடர்ந்து டி.இமான் இசையமைக்கிறார்.

வீடியோ பார்க்க: கவுண்டமணி 50!

First published: July 18, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...