Home /News /entertainment /

இயக்குனர் பாண்டிராஜ் வெளியிட்ட சூர்யா - கார்த்தி போஸ்டர்... இணையத்தில் வைரல்

இயக்குனர் பாண்டிராஜ் வெளியிட்ட சூர்யா - கார்த்தி போஸ்டர்... இணையத்தில் வைரல்

சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தை பாண்டிராஜ் இயக்கி வருகிறார். அதன் போஸ்டரையும், விருமன் போஸ்டரையும் இணைத்து அட்டகாசமான புதிய போஸ்டர் உருவாக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    கார்த்தி நடிப்பில் முத்தையா இயக்கத்தில் உருவாகி வரும் விருமன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இதையொட்டி, சூர்யா, கார்த்தி ஒன்றாக இருக்கும் போஸ்டரை இயக்குனர் பாண்டிராஜ் வெளியிட அந்தப் போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில், விருமன் திரைப்படம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதில் கார்த்தியின் ஜோடியாக இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி நடித்துள்ளார்.

    கடந்த ஆண்டு கார்த்திக்கு சுல்தான் என்ற ஒரேயொரு படம் மட்டுமே வெளிவந்தது. தற்போது, சர்தார், படங்களில் கார்த்தி நடித்து வருகிறார். முன்பு முத்தையாவின் இயக்கத்தில் கார்த்தி கடந்த 2015-ல் கொம்பன் படத்தில் நடித்திருந்தார். மாமனார் ராஜ்கிரன் - மருமகன் கார்த்தி இடையிலான உறவு குறித்து, சென்டிமென்ட் மற்றும் ஆக்சன் காட்சிகள் நிறைந்ததாக கொம்பன் வெளிவந்து, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

    இதன்பின்னர் முத்தையா இயக்கிய மருது, கொடிவீரன், தேவராட்டம், புலிக்குத்தி பாண்டி ஆகிய படங்கள் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. இதனால், விருமன் படத்தை வெற்றிப்படமாக மாற்றுவதில், முத்தையா தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.

    இந்நிலையில், விருமன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெய்ன்மென்ட் வெளியிட்டுள்ளது.

    இதையொட்டி, இயக்குனர் பாண்டிராஜ் சூர்யா - கார்த்தி இணைந்து இருக்கும் போஸ்டரை வெளியிட்டுள்ளார். இந்த போஸ்டர் சினிமா ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தை பாண்டிராஜ் இயக்கி வருகிறார். அதன் போஸ்டரையும், விருமன் போஸ்டரையும் இணைத்து அட்டகாசமான புதிய போஸ்டர் உருவாக்கப்பட்டுள்ளது.

    விருமன் படத்தில் கார்த்தி, அதிதியுடன், பிரகாஷ் ராஜ், அபர்னா பாலமுரளி, சூரி, ராஜ்கிரண், மைனா நந்தினி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். விருமன் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ள நிலையில், போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஏப்ரல் இறுதியில் அல்லது மே முதல் வாரத்தில் விருமன் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    Published by:Musthak
    First published:

    Tags: Actor Karthi, Actor Suriya

    அடுத்த செய்தி