• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • நான் ஸ்டாப் 51 நாள்கள் - எதற்கும் துணிந்தவன் சாதனை அப்டேட்!

நான் ஸ்டாப் 51 நாள்கள் - எதற்கும் துணிந்தவன் சாதனை அப்டேட்!

எதற்கும் துணிந்தவன்

எதற்கும் துணிந்தவன்

சமீபத்தில் எந்தப் படத்துக்கும் இத்தனை நீண்டநாள் வெளியூர் ஷெட்யூல்ட் இருந்ததில்லை. மழை, வெயில் பாராமல் தொடர்ச்சியாக 51 தினங்கள் படப்பிடிப்பு நடத்தியதே ஒரு சாதனைதான்.

  • News18
  • Last Updated :
  • Share this:
எதற்கும் துணிந்தவன் படம் குறித்த முக்கியமான அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார் இயக்குனர் பாண்டிராஜ்.

சூர்யா, ப்ரியங்கா அருள்மோகன் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் எதற்கும் துணிந்தவன் வளர்ந்து வருகிறது. பாண்டிராஜ் கிராமத்துப் பின்னணியில் இந்த ஆக்ஷன் என்டர்டெயினரை இயக்கி வருகிறார். சத்யராஜ், சூரி போன்ற முக்கியமான நடிகர்களும் படத்தில் இருக்கிறார்கள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கொரோனா இரண்டாம் அலை கட்டுக்குள் வந்து படப்பிடிப்பு அனுமதிக்கப்பட்டதும், காரைக்குடி ஷெட்யூல்டை தொடங்கினார் பாண்டிராஜ். அப்போதே, இதுவொரு நீண்ட ஷெட்யூல்ட் என குறிப்பிட்டிருந்தார் படத்தின் ஒளிப்பதிவாளர் ரத்னவேலு. நேற்று அந்த ஷெட்யூல்ட் முடிவுக்கு வந்தது. இதுபற்றி ட்வீட் செய்துள்ள பாண்டிராஜ், 51 தினங்கள் தொடர்ச்சியாக நடத்திய படப்பிடிப்பு முடிவுக்கு வந்திருப்பதாக தெரிவித்துள்ளார்



Also read... ஒரு நல்ல பயணம்... ரகுமானின் பொன்னியின் செல்வன் நெகிழ்ச்சிப் பதிவு!



சமீபத்தில் எந்தப் படத்துக்கும் இத்தனை நீண்டநாள் வெளியூர் ஷெட்யூல்ட் இருந்ததில்லை. மழை, வெயில் பாராமல் தொடர்ச்சியாக 51 தினங்கள் படப்பிடிப்பு நடத்தியதே ஒரு சாதனைதான். காரைக்குடி ஷெட்யூல்ட் நேற்றுடன் முடிவுக்கு வந்த நிலையில், இன்னும் சில காட்சிகள் மட்டுமே எடுக்கப்பட உள்ளன. அதிகபட்சம் எட்டு தினங்களில் மொத்தப் படப்பிடிப்பும் நிறைவுபெறும் என்கிறது படக்குழு.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் படத்தில் இடம்பெற்றிருப்பதாக உலவும் செய்தி, படம் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: