ஆணவக் கொலைகள் பற்றிய சமரசமில்லாத கதை...! கன்னி மாடத்தை பாராட்டிய பா.ரஞ்சித்

ஆணவக் கொலைகள் பற்றிய சமரசமில்லாத கதை...! கன்னி மாடத்தை பாராட்டிய பா.ரஞ்சித்
இயக்குநர் பா.ரஞ்சித் உடன் போஸ் வெங்கட்
  • Share this:
கன்னிமாடம் திரைப்படத்தைப் பார்த்த இயக்குநர் பா.ரஞ்சித் வியந்து பாராட்டியுள்ளார்.

சாண்டில்யனால் எழுதப்பட்ட ‘கன்னி மாடம்’ என்ற ஒரு வரலாற்று புதினத்தின் பெயரிலேயே தமிழ் திரையில் தற்போது ’கன்னி மாடம்’ என்ற பெயரில் திரைப்படம் வெளியாகி உள்ளது. இத்திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார் நடிகர் போஸ் வெங்கட்.  ஸ்ரீராம், காயத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சாதி ஆணவக் கொலைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இத்திரைப்படம் சில தினங்களுக்கு முன்னர் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இத்திரைப்படத்தைப் பார்த்த திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் படக்குழுவுக்கு பாராட்டு தெரிவித்திருக்கும் நிலையில் இயக்குநர் பா.ரஞ்சித்தும் வெகுவாக பாராட்டியுள்ளார்.


கன்னிமாடம் படம் குறித்து பா.ரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, “கன்னிமாடம் திரைப்படம் இயல்பான திரையோட்டத்தில், சமரசமில்லாமல், ஆணவக்கொலைகள் குறித்து, தான் சொல்ல நினைத்த கதையை மிக இயல்பாக காட்சிப்படுத்தி இருக்கும் இயக்குநர் போஸ்வெங்கட் மற்றும் அத்திரைப்பட குழுவினருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க: இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம்...! மூன்று மதங்களுக்கும் ஒரே ஆலயம் கட்டும் ராகவா லாரன்ஸ்
First published: March 2, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading