முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / சினிமாவில் அறிமுகமாகும் பா.ரஞ்சித் மனைவி - ரசிகர்கள் வாழ்த்து!

சினிமாவில் அறிமுகமாகும் பா.ரஞ்சித் மனைவி - ரசிகர்கள் வாழ்த்து!

அனிதா - பா.ரஞ்சித்

அனிதா - பா.ரஞ்சித்

ரஞ்சித்தும், அனிதாவும் சென்னையில் உள்ள ஃபைன் ஆர்ட்ஸ் கல்லூரியில் படித்தபோது காதலில் விழுந்து, பின்னர் திருமணம் செய்துக் கொண்டனர்.

  • 1-MIN READ
  • Last Updated :

இயக்குநர் பா.ரஞ்சித்தின் மனைவி அனிதா தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார்.

ஆர்யா, துஷாரா, பசுபதி, ஷபீர், ஜான் கொக்கன், ஜான் விஜய் மற்றும் பலர் நடித்த 'சார்பட்டா பரம்பரை' திரைப்படத்திற்காக விமர்சன ரீதியான பாராட்டைப் பெற்றார் இயக்குநர் பா.ரஞ்சித். இதையடுத்து அவர் தனது அடுத்தப்படமான 'நட்சத்திரம் நகர்கிறது' படப்பிடிப்பை தற்போது முடித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து அந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தொடங்கவிருக்கின்றன. இந்நிலையில் ரஞ்சித்தின் மனைவி அனிதா ‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகியுள்ளார். இந்த ரொமாண்டிக் காமெடி படத்தில் ஆடை வடிவமைப்பாளராகவும் ஸ்டைலிஷ்டாகவும் தனது பயணத்தை தொடங்கியிருக்கிறார் அனிதா. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "நட்சத்திரம் நகர்கிறது படப்பிடிப்பு இறுதியாக முடிந்துவிட்டது. இந்த முதல் வாய்ப்புக்கு மிக்க நன்றி அன்புள்ள பா ரஞ்சித். கல்லூரி காலத்திற்குப் பிறகு உங்களுடன் பணியாற்றுவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ரஞ்சித்தும், அனிதாவும் சென்னையில் உள்ள ஃபைன் ஆர்ட்ஸ் கல்லூரியில் படித்தபோது காதலில் விழுந்து, பின்னர் திருமணம் செய்துக் கொண்டனர். தற்போது இந்தத் தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். பல ஹிட் படங்களைக் கொடுத்த ரஞ்சித்தின் மனைவி அனிதாவும் சினிமாவில் அறிமுகமாவதற்கு, ரசிகர்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க - 11 லட்சம் பணத்துடன் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய அமீர்?

'நட்சத்திரம் நகர்கிறது' படத்தில் காளிதாஸ் ஜெயராம் மற்றும் துஷாரா விஜயன் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, கலையரசன், ஹரி கிருஷ்ணன் மற்றும் "டான்சிங் ரோஸ்" ஷபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Pa. ranjith