• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • கமல்ஹாசனை இயக்கும் பா.ரஞ்சித்?

கமல்ஹாசனை இயக்கும் பா.ரஞ்சித்?

கமல் - பா.ரஞ்சித்

கமல் - பா.ரஞ்சித்

இளம் இயக்குனர்களுடன் இணைந்து பணியாற்றுவதில் கமலுக்கு தயக்கம் இன்னும் போகவில்லை.

  • Share this:
    நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் ஒரு படத்தை பா.இரஞ்சித் இயக்கயிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    சட்டசபை தேர்தல் முடிந்த பின் மீண்டும் சினிமாவில் பிஸியாகியுள்ளார் கமல் ஹாசன். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அவர் தயாரித்து நடித்து வரும் விக்ரம் வேகமாக வளர்ந்து வருகிறது. இதையடுத்து பாதியில் நிற்கும் ஷங்கரின் இந்தியன் 2 படத்தில் நடிக்கிறார். அத்துடன் லைகா தயாரிப்பில் மகேஷ் நாராயணன் இயக்கும் படத்திலும் நடிக்க உள்ளார்.

    இந்தத் திரைப்படங்களுக்குப் பிறகு அவர் இரஞ்சித் இயக்கத்தில் நடிக்கயிருப்பதாக உள்வட்ட தகவல்கள் கூறுகின்றன. இதற்கு பலமான காரணங்கள் உள்ளன.

    ரஞ்சித்தின் சார்பட்டா பரம்பரை வெளியான நேரம் ரஞ்சித்தையும், சார்பட்டா பரம்பரை படக்குழுவினரையும் தனது அலுவலகத்தக்கு வரவழைத்து சிறப்பான படத்தை தந்ததற்கு தனது பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்து கொண்டார். அப்போது இருவரும் இணைந்து வேலை செய்வது குறித்து பேசியதாக தகவல்கள் வந்தன.

    இளம் இயக்குனர்களுடன் இணைந்து பணியாற்றுவதில் கமலுக்கு தயக்கம் இன்னும் போகவில்லை. முதல்முறையாக லோகேஷ் கனகராஜுக்கு வாய்ப்பு தந்திருக்கிறார். இதற்கு முன் செல்வராகவன், மிஷ்கின் போன்ற ஓரிருவர் கமலை வைத்து படம் பண்ண முயன்று அவை பாதியிலேயே நின்று போயின. அந்த இயக்குனர்களின் வட்டத்துக்குள் கமல் செட்டாக மறுத்ததே காரணம் என சொல்லப்பட்டது.

    இந்நிலையில், கமலின் பிறந்தநாளை முன்னிட்டு அவரை சந்தித்து வாழ்த்து கூறினார் ரஞ்சித். அப்போது அவர் சொன்ன ஐடியா கமலுக்குப் பிடித்திருந்ததாகவும், அதை டெவலப் செய்ய கூறியதாகவும் நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன. இந்தியன் 2, மகேஷ் நாராயணன் படங்கள் முடிந்த பின் ரஞ்சித் இயக்கத்தில் கமல் நடிக்கலாம் என்கிறார்கள். வெற்றிமாறன் கமலை வைத்து ஒரு படம் இயக்கவிருப்பதும் குறிப்பிடத்தக்கது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: