Home /News /entertainment /

பா.ரஞ்சித் தயாரிக்கும் கிரிக்கெட்டை மையப்படுத்திய படத்தின் ஷூட்டிங் ஆரம்பம்...

பா.ரஞ்சித் தயாரிக்கும் கிரிக்கெட்டை மையப்படுத்திய படத்தின் ஷூட்டிங் ஆரம்பம்...

பா ரஞ்சித்

பா ரஞ்சித்

பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் பேனரின் கீழ் பரியேறும் பெருமாள், ரைட்டர், சேத்துமான், குதிரைவால், இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு, நட்சத்திரம் நகர்கிறது உள்ளிட்ட படங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    இயக்குனர் பா ரஞ்சித் தயாரிக்கும், கிரிக்கெட்டை மையப்படுத்திய படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது.

    தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் பா.ரஞ்சித். இவரது இயக்கத்தில் வெளிவந்த அட்டக்கத்தி, கபாலி, காலா, மெட்ராஸ், சார்பட்டா பரம்பரை உள்ளிட்ட படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.

    படங்களை இயக்குவதுடன் தனது நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் படங்களையும் தயாரித்து வருகிறார். அந்த வகையில் நீலம் புரொடக்சன்ஸ் பேனரின் கீழ் பரியேறும் பெருமாள், ரைட்டர், சேத்துமான், குதிரைவால், இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு, நட்சத்திரம் நகர்கிறது உள்ளிட்ட படங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

    7 வருடங்களுக்கும் மேலாக ஒளிபரப்பாகும் சன் டிவி சீரியல்... விரைவில் எண்ட் கார்டு?

    இந்நிலையில் அடுத்ததாக கிரிக்கெட்டை மையப்படுத்திய படம் ஒன்று நீலம் புரொடக்சன்ஸ் சார்பாக தயாரிக்கப்படுகிறது. இதனை லெமன் லீஃப் கிரியேஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. விரைவில் இந்த படத்தின் டைட்டில் அறிவிக்கப்படவுள்ளது.

    இதில் அசோக் செல்வன், சாந்தனு பாக்யராஜ், பிரித்வி பாண்டியராஜன், கீர்த்தி பாண்டியன், திவ்யா துரைசாமி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். ஓ2, தம்மம் ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த தமிழழகன் இந்தப் படத்திற்கான ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.

    எங்களுக்காக வருத்தப்பட வேண்டாம்... கணவரை விவாகரத்து செய்வதாக அறிவித்த பிக் பாஸ் வைஷ்ணவி

    கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். அரக்கோணம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தப்படவுள்ளது. முதற்கட்டமாக இன்று படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டு இருக்கிறது.

    கிரிக்கெட் விளையாட்டு மூலம் பிணைக்கப்பட்ட உணர்வுகள், நட்பு உள்ளிட்டவற்றை விவரிக்கும் வகையில், நல்லதொரு பொழுதுபோக்கு படமாக இந்தப் படம் உருவாக்கப்படவுள்ளது.
    Published by:Musthak
    First published:

    Tags: Pa. ranjith

    அடுத்த செய்தி