Home /News /entertainment /

பா. ரஞ்சித் இயக்கும் படத்தின் டைட்டில், ஃபர்ஸ்ட் லுக் 6-ம்தேதி வெளியீடு… கவனம் ஈர்க்கும் போஸ்டர்

பா. ரஞ்சித் இயக்கும் படத்தின் டைட்டில், ஃபர்ஸ்ட் லுக் 6-ம்தேதி வெளியீடு… கவனம் ஈர்க்கும் போஸ்டர்

பா.ரஞ்சித்

பா.ரஞ்சித்

Pa Ranjith Next Movie : பா. ரஞ்சித் இயக்கும் அடுத்த படம் காதல் மற்றும் அரசியலை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.

பா. ரஞ்சித் இயக்கி வரும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நாளை மறுதினம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சார்பட்டா பரம்பரை திரைப்படத்தை தொடர்ந்து பா.ரஞ்சித் காளிதாஸ் ஜெயராம் நடிக்கும் திரைப்படத்தை இயக்குகிறார். காதலை மையமாக வைத்து எடுக்கப்படும் இந்தப் படத்தில் காளிதாஸ் ஜெயராமுடன், கலையரசன், டான்ஸிங் ரோஸ் ஷபீர், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

அதேபோல் தென்மா இசையமைக்கிறார்.  இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்து இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

ரஜினியின் ஜெயிலர் படத்தில் இணையும் முன்னணி காமெடி நடிகர்… ரசிகர்களுக்கு சூப்பர் அப்டேட்

இதுவரை படத்தின் தலைப்போ அல்லது முதல் பார்வையோ அதிகாரப்பூர்வமாக வெளியாகாமல் இருந்தது. இந்த நிலையில் வரும் 6-ம் தேதி மாலை 4 மணிக்கு வெளியாகிறது என பா.ரஞ்சித் அறிவித்துள்ளார்.



இந்த படத்திற்கு நட்சத்திரம் நகர்கிறது என்று பெயர் வைத்துள்ளனர். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை நாளை மறுதினம் வெளியாகிறது.

தமிழ் சினிமாவில் அதிகரிக்கும் ஆங்கில தலைப்பு… முன்னணியில் விஜய், சிவகார்த்திகேயன் படங்கள்

அத்துடன் Love Is Political என்ற வாசகத்தையும் குறிப்பிட்டுள்ளார். இதனால் காதல் உணர்வு சார்ந்த முக்கிய விஷயத்தை நட்சத்திரம் நகர்கிறது படத்தில் பா.ரஞ்சித் படமாக்கியுள்ளார் என கூறப்படுகிறது. இந்தப் படத்தை தொடர்ந்து விக்ரம் நடிக்கும் மைதானம் என்ற படத்தை பா.ரஞ்சித் இயக்கவுள்ளார்.
Published by:Musthak
First published:

Tags: Pa. ranjith

அடுத்த செய்தி