Home /News /entertainment /

பா. ரஞ்சித் இயக்கத்தில் கமல் நடிக்கும் படத்தின் அப்டேட்…

பா. ரஞ்சித் இயக்கத்தில் கமல் நடிக்கும் படத்தின் அப்டேட்…

கமலுடன் இயக்குனர் பா. ரஞ்சித்

கமலுடன் இயக்குனர் பா. ரஞ்சித்

தேவர்மகன் படத்தின் அடுத்த பாகமான தலைவன் இருக்கிறான் என்ற படத்தை உருவாக்கும் திட்டமும் கமலிடம் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன .

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    பா. ரஞ்சித் இயக்கத்தில் கமல் நடிக்கும் படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கும் என்ற அப்டேட் வெளிவந்துள்ளது.

    விக்ரம் படத்தின் மெகா வெற்றியை தொடர்ந்து, கமல் தற்போது இந்தியன்2 படத்தின் ஷூட்டிங்கில் இணையவுள்ளார். இந்தியன் 2 படத்தின் 40 சதவீத காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இதனால் மீதமுள்ள பகுதியை விறுவிறுவென முடிக்க இயக்குனர் ஷங்கர் திட்டமிட்டுள்ளார். இந்தியன் முதல்பாகம் மிகப்பெரும் வெற்றியை பெற்றதால் இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு பன்மடங்கு உள்ளது.

    இந்த படத்தில் கமலுடன் காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், குரு சோமசுந்தரம், சித்தார்த் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். இவர்களுடன் சமுத்திரகனி, பாபிசிம்ஹா, டெல்லிகணேஷ், ஜெயபிரகாஷ், வெண்ணிலா கிஷோர், ஜார்ஜ் மரியான், மனோபாலா உள்ளிட்டோரும் படத்தில் நடிக்கிறார்கள்.

    குழந்தை பெற்றுக் கொள்வது குறித்து நடிகை தபுவின் பேச்சால் சர்ச்சை

    இந்தியன் 2 படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். லைகா நிறுவனத்துடன் இணைந்து உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இந்தியன்2 படத்தை தயாரிக்கிறது. இந்த படத்தை முடித்துக் கொண்டவுடன் ரஞ்சித் இயக்கும் படத்தில் கமல் இணைவார் என்று தற்போது தகவல்கள் வெளிவந்துள்ளன.

    அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் பா.ரஞ்சித் - கமல் இணையும் படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு இடைப்பட்ட காலத்தில் விக்ரம் நடிக்கும் அவரது 61-வது படத்தை ரஞ்சித் இயக்கி முடிப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. சில மாதங்களுக்கு முன்பாக கமலை சந்தித்த பா.ரஞ்சித் படத்தின் கதை குறித்து கூறியுள்ளார். இதையடுத்து கமல், உடனடியாக கால்ஷீட் தேதிகளை அளித்திருக்கிறார்.

    தள்ளிப்போன திருமணம்.. உண்மையான காரணத்தை சொன்ன மகாலட்சுமி கணவர் ரவீந்தர்!

    முன்னதாக கமலிடம் வெற்றிமாறன் சில கதைகளை கூறியுள்ளார். இதனை படமாக்கும் எண்ணமும் கமலிடம் இருப்பதாக கூறப்படுகிறது. இதேபோன்று தேவர்மகன் படத்தின் அடுத்த பாகமான தலைவன் இருக்கிறான் என்ற படத்தை உருவாக்கும் திட்டமும் கமலிடம் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன .
    Published by:Musthak
    First published:

    Tags: Kamal Haasan, Pa. ranjith

    அடுத்த செய்தி