Home /News /entertainment /

கமல்ஹாசன் உடனான படத்தின் கதை குறித்து இயக்குனர் பா. ரஞ்சித் பேட்டி…

கமல்ஹாசன் உடனான படத்தின் கதை குறித்து இயக்குனர் பா. ரஞ்சித் பேட்டி…

கமல் - பா.ரஞ்சித்

கமல் - பா.ரஞ்சித்

Pa Ranjith Kamal Movie : விக்ரம் படத்தின் இண்டஸ்ட்ரி ஹிட்டிற்கு பிறகு கமல், மகேஷ் நாராயணன் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார்

    கமல் படத்தின் கதை குறித்து இயக்குனர் பா. ரஞ்சித் பேட்டி அளித்துள்ளார். அவர் அளித்துள்ள தகவல் கமல் ரசிகர்களை உற்சாகம் அடைய வைத்துள்ளது.

    தமிழ் சினிமாவில் மிகவும் பிஸியான இயக்குனர்களில் ஒருவராக பா. ரஞ்சித் மாறியுள்ளார். சார்பட்டா படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பின்னர் ரஞ்சித், நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்தை இயக்கியுள்ளார். விரைவில் இந்த திரைப்படம் திரைக்கு வரவுள்ளது.

    அடுத்ததாக ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கும், விக்ரம் நடிக்கும் படத்தை பா.ரஞ்சித் இயக்குகிறார். பிரிட்டிஷார் காலத்தில் நடந்த கதையைக் கொண்டதாக இந்தப் படம் உருவாக்கப்படுகிறது.

    விளம்பரப் படங்களில் நடிக்கப் போகும் அமிதாப் பச்சனின் பேத்தி… முன்னணி நடிகைகள் வாழ்த்து

    படத்தின் ஷூட்டிங் கர்நாடகாவில் உள்ள கோலார் தங்க வயல் கே.ஜி.எஃப்.-ல்  நடைபெறும் என பா.ரஞ்சித் கூறியிருந்தார். இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கவுள்ளார். படத்தில் இடம்பெறும் மற்ற கலைஞர்கள் விபரம் விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.

    இந்தபடத்தை முடித்துக் கொண்டு கமல் நடிக்கவுள்ள படத்தை பா. ரஞ்சித் இயக்குகிறார். இந்தப் படம் மதுரையை மையமாக வைத்து எடுக்கப்படும் படம் என்று ரஞ்சித் கூறியுள்ளார். கமலை இயக்கும் படத்திற்கான கதையை ரஞ்சித் முழுவதுமாக எழுதவில்லை. இந்த பணிகள் முடிந்ததும், கமலிடம் விவரிக்க உள்ளதாக ரஞ்சித் கூறியுள்ளார்.

    Maaveeran Title Announcement | எதிர்த்து நின்றான் மாவீரன்... வெளியானது சிவகார்த்திகேயனின் டைட்டில் வீடியோ!

    இன்னொரு பக்கம் விக்ரம் படத்தின் இண்டஸ்ட்ரி ஹிட்டிற்கு பிறகு கமல், மகேஷ் நாராயணன் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை முடித்துக் கொண்டு ரஞ்சித் படத்தில் கமல் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    Published by:Musthak
    First published:

    Tags: Pa. ranjith

    அடுத்த செய்தி