பா.ரஞ்சித்துக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை - மகிழ்ச்சியில் குடும்பம்!

பா.ரஞ்சித்துக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை - மகிழ்ச்சியில் குடும்பம்!
பா.ரஞ்சித்
  • Share this:
பிரபல இயக்குநர் பா.ரஞ்சித்துக்கு இரண்டாவதாக ஆண்குழந்தை பிறந்துள்ளது.

இயக்குநர் வெங்கட்பிரபுவிடம் உதவியாளராக பணியாற்றி பின்னர் 'அட்டகத்தி' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் பா.ரஞ்சித். தொடர்ந்து மெட்ராஸ், கபாலி, காலா என அடுத்தடுத்து ஹிட் படங்களைக் கொடுத்த அவர், தாழ்த்தப்பட்ட மக்களின் குரலை, அரசியலை திரையில் பேசினார்.

இவருக்கு அனிதா என்ற மனைவியும், மகிழினி என்ற மகளும் உள்ள நிலையில், இன்று அதிகாலை 3 மணியளவில் இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. இக்குழந்தைக்கு மிளிரன் என்று பெயரிடப்பட்டுள்ளது. இரண்டாவது குழந்தையின் வருகையை அடுத்து மகிழ்ச்சியில் உள்ளது பா.ரஞ்சித்தின் குடும்பம்.


திரைப்படங்களை இயக்குவது மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் அவதாரமெடுத்திருக்கும் பா.ரஞ்சித், பரியேறும் பெருமாள், இரண்டாவது உலகப்போரின் கடைசி குண்டு உள்ளிட்ட படங்களைத் தயாரித்து வெற்றி பெற்றுள்ளார். தற்போது ஆர்யாவை நாயகனாக வைத்து குத்துச் சண்டையை மையப்படுத்திய சல்பேட்டா என்ற படத்தை பா.ரஞ்சித் இயக்கி வருவதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க:'மாஸ்டர்' திரைப்படம் வெற்றிடைய அஜித் ரசிகர்கள் வாழ்த்து' - மதுரையில் கவனம் ஈர்த்த போஸ்டர்!
First published: March 19, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading