பா.ரஞ்சித் படத்துக்காக உடம்பை மாற்றிய ஆர்யா... நாளை டைட்டில் ரிலீஸ்!

பா.ரஞ்சித் படத்துக்காக உடம்பை மாற்றிய ஆர்யா... நாளை டைட்டில் ரிலீஸ்!
ஆர்யா | பா.ரஞ்சித்
  • Share this:
ஆர்யா நடிக்கும் 30-வது திரைப்படத்தின் டைட்டில் நாளை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஆர்யா நடிப்பில் கடைசியாக வெளியான படம் காப்பான். அந்தப் படத்தைத் தொடர்ந்து ‘டெடி’படத்தில் நடித்து முடித்திருக்கும் ஆர்யா தற்போது இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிக்கிறார். இந்தப் படம் ஆர்யா நடிக்கும் 30-வது படம்.

1970-காலகட்டத்தில் நடக்கும் குத்துச் சண்டையை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்துக்கு சல்பேட்டா என்று பெயரிடப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்தப் படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக துஷாராவும், கலையரசன் முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கிறார். கே.ஜி.எப் படத்தில் வில்லனாக நடித்த ராமச்சந்திரா ராஜு இந்தப் படத்தில் ஆர்யாவுக்கு வில்லனாக நடிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையில் பாடல்கள் உருவாகி வருகின்றன.


இந்தப் படத்துக்காக இயக்குநர் பா.ரஞ்சித் முறையாக குத்துச் சண்டை கற்று பின் படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளார். நடிகர் ஆர்யா இந்தப் படத்துக்காக தனது உடலமைப்பை முற்றிலும் மாற்றியுள்ளார்.

அதற்கான புகைப்படத்துடன் படம் குறித்து ட்வீட் செய்திருக்கும் நடிகர் ஆர்யா, வலிமையாக இருப்பது மட்டும்தான் உங்களுக்கு உள்ள ஒரே வாய்ப்பாக இருக்கும். நீங்கள் எவ்வளவு வலிமை கொண்டவர்கள் என்று உங்களுக்கு ஒருபோதும் தெரியாது” என்று கூறியுள்ளார்.மேலும் படிக்க: எனக்கு சக்காளத்தி கிடையாது... ஆனால் ஆதி? - குஷ்பு கல கல பேச்சு

 
First published: February 19, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்