வீட்டு வாடகை பாக்கி... பெண் மீது இயக்குநர் வாசு போலீசில் புகார்!

வீட்டு வாடகை பாக்கி... பெண் மீது இயக்குநர் வாசு போலீசில் புகார்!
இயக்குநர் பி.வாசு
  • Share this:
வீட்டு வாடகை 7 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் தரவில்லை என்று ஜானகி என்ற பெண் மீது இயக்குநர் பி.வாசு புகாரளித்துள்ளார்.

சென்னை கோபாலபுரம் அவ்வை சண்முகம் சாலையில் குடும்பத்துடன் வருபவா் திரைப்பட இயக்குநா் பி.வாசு. இவருக்குச் சொந்தமான மற்றொரு வீடு சென்னை கோடம்பாக்கம் டிரஸ்ட்புரம் 6-வது தெருவில் உள்ளது. அதனை ஜானகி என்பவருக்கு வாடகைக்கு விட்டுள்ளார். அந்த இடத்தில் ஜானகி என்ற பெண் சக்தி மகளிர் விடுதி நடத்தி வருகிறார்.

இந்நிலையில் மாதம் ஒன்றுக்கு 75 ஆயிரம் ரூபாய் வீதம் 7 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வாடகை பாக்கி தர வேண்டும் என்றும், அதனை கேட்டால் தர மறுப்பதாகவும், வீட்டை காலி செய்யவும் மறுப்பு தெரிவிப்பதாகவும் கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் இயக்குநர் பி.வாசு புகாரளித்துள்ளார்.


இந்த நிலையில் கோடம்பாக்கம் காவல்துறை ஆய்வாளர் பழனி விசாரணை மேற்கொண்டபோது சக்தி மகளிர் வடுதி நடத்தக்கூடிய ஜானகி முறையாக விடுதிக்கான அனுமதி பெறவில்லை என்பது தெரிய வந்துள்ளது. அதேபோன்று வாசுவிடம் சுமார் ஒரு ஆண்டு காலத்திற்கு மேலாக வாடகை தராமல் ஏமாற்றிய வந்ததும் தெரியவந்துள்ளது. இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Also see:


Loading...

First published: December 2, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...