மீண்டும் பி.வாசு இயக்கத்தில் பிரபு - எந்தப் படம் தெரியுமா?

த்ரிஷ்யம் 2 பட கன்னட ரீமேக்

பி.வாசு இயக்கத்தில் பிரபு நடித்த சின்னதம்பி அவரது சினிமா சரித்திரத்தில் அதிக நாள் ஓடிய திரைப்படம். அதன் பிறகு பல படங்கள் இவர்களின் கூட்டணியில் வெளியாகி வெற்றி பெற்றது.

  • News18
  • Last Updated :
  • Share this:
புகழ்பெற்ற பி.வாசு - பிரபு கூட்டணி மீண்டும் ஒன்றிணைந்திருக்கிறது. நீண்ட நாள்களுக்குப் பிறகு வாசு இயக்கத்தில் பிரபு நடிக்கயிருக்கிறார்.

பி.வாசு இயக்கத்தில் பிரபு நடித்த சின்னதம்பி அவரது சினிமா சரித்திரத்தில் அதிக நாள் ஓடிய திரைப்படம். அதன் பிறகு பல படங்கள் இவர்களின் கூட்டணியில் வெளியாகி வெற்றி பெற்றது. 2005 இல் வாசு இயக்கிய சந்திரமுகியில் பிரபுவும் நடித்திருந்தார். படம் சூப்பர்ஹிட்டானது. அதன் பிறகு 2014 இல் த்ரிஷ்யம் படத்தின் கன்னட ரீமேக்கில் வாசுவின் இயக்கத்தில் பிரபு நடித்தார். இதில் அவர் போலீஸ் அதிகாரி ஆஷா சரத்தின் கணவர் வேடத்தை செய்திருந்தார்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

த்ரிஷ்யம் அங்கு வெற்றி பெற்ற நிலையில், த்ரிஷ்யம் 2 படத்தையும் கன்னடத்தில் ரீமேக் செய்கின்றனர். த்ரிஷ்யத்தை இயக்கிய வாசுவே இந்த ரீமேக்கையும் இயக்குகிறார். அதில் நடித்த ரவிச்சந்திரன், நவ்யா நாயர் இதிலும் நடிக்கின்றனர். ஆஷா சரத்தின் கணவராக பிரபு நடிக்கிறார்

Also read... பிக்பாஸ் பிரபலங்கள் இணைந்து நடித்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு - உற்சாகத்தில் ரசிகர்கள்!

த்ரிஷ்யம் 2 தெலுங்கு ரீமேக்கை ஜீத்து ஜோசப் இயக்கியுள்ளார். இந்தி ரீமேக்கும் விரைவில் தொடங்கப்பட உள்ளது. தமிழில் த்ரிஷ்யம் 2 ரீமேக் செய்யப்படுமா இல்லையா என்பது கமலின் கையில்தான் உள்ளது.
Published by:Vinothini Aandisamy
First published: