முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ‘ரஜினி படத்தில் அடிச்சு தூக்குவாரு நெல்சன்’ – ரெடின் கிங்ஸ்லி நம்பிக்கை

‘ரஜினி படத்தில் அடிச்சு தூக்குவாரு நெல்சன்’ – ரெடின் கிங்ஸ்லி நம்பிக்கை

ரஜினியின் 169வது படத்துடைய ஃபர்ஸ்ட் லுக்- ரெடின் கிங்ஸ்லி

ரஜினியின் 169வது படத்துடைய ஃபர்ஸ்ட் லுக்- ரெடின் கிங்ஸ்லி

Thalaivar 169 : வசூல் ரீதியாக பீஸ்ட் வெற்றி பெற்றாலும், விமர்சன ரீதியில் பின்னடைவை சந்தித்தது. இதனால் விஜய் ரசிகர்களும் நெல்சனை சரமாரியாக விமர்சித்திருந்தனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

இயக்குனர் நெல்சன் மீது கடந்த சில வாரங்களாக விமர்சனம் முன்வைக்கப்படும் நிலையில் அடுத்த அவர் இயக்கவுள்ள ரஜினி படத்தில் அவர் அடிச்சு தூக்குவாரு என்று நடிகர் ரெடின் கிங்ஸ்லி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கோலமாவு கோகிலா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகியவர் நெல்சன் திலீப் குமார். இந்த படத்தில் நயன்தாரா முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். அனிருத் இசையில் இந்த படத்தின் பாடல்கள் மெகா ஹிட்டான நிலையில் யோகிபாபுவின் காமெடியும் அதிகம் பேசப்பட்டது.

கோலமாவு கோகிலா வெற்றிப் படமானதை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் டாக்டர் என்ற படத்தை நெல்சன் இயக்கினார். இந்த படமும் மெகாஹிட்டாகி ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.

இதையடுத்து தனது 3வது படத்திலேயே விஜய்யை இயக்கும் வாய்ப்பை நெல்சன் பெற்றார். நெல்சன், விஜய், அனிருத் கூட்டணியில் பீஸ்ட் திரைப்படம் கடந்த ஏப்ரல் 13-ம்தேதி வெளியானது. தொடர் வெற்றிப் படங்களை கொடுத்த இயக்குனர் என்பதால் இந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு அதிக ஆர்வம் காணப்பட்டது.

’மீண்டும் உங்களை சந்திப்பேன்; என்னைப் பற்றிய வதந்திகளை நம்ப வேண்டாம்’ – அமெரிக்கா புறப்படும் முன் டி.ஆர். கண்ணீர் மல்க பேட்டி

இருப்பினும், பலவீனமான திரைக்கதை காரணமாக பீஸ்ட் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இந்த படம் வெளியான மறுநாள் கே.ஜி.எஃப். 2 திரைப்படம் வெளியானது. இதனால் ரசிகர்கள் இரு படங்களையும் ஒப்பிட்டு விமர்சிக்க ஆரம்பித்ததால் பீஸ்ட் படக்குழுவினருக்கு நெருக்கடிகள் அதிகரித்தன.

வசூல் ரீதியாக பீஸ்ட் வெற்றி பெற்றாலும், விமர்சன ரீதியில் பின்னடைவை சந்தித்தது. இதனால் விஜய் ரசிகர்களும் நெல்சனை சரமாரியாக விமர்சித்திருந்தனர்.

இந்நிலையில் அடுத்ததாக நெல்சன் ரஜினிகாந்த் படத்தை இயக்கவுள்ளார். பீஸ்ட்டில் நெல்சன் சறுக்கியதால் ரஜினி படத்தின் திரைக்கதையை கவனிக்கும் பொறுப்பு கே.எஸ். ரவிக்குமாருக்கு  அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

லாரன்ஸ், வடிவேலு நடிப்பில் சந்திரமுகி – 2… அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது

இந்த நிலையில் ரஜினி படம் குறித்த அப்டேட்டை காமெடி நடிகரும், நெல்சனின் நெருங்கிய நண்பருமான ரெடின் கிங்ஸ்லி வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், ‘ரஜினி படத்தின் கதை தொடர்பாக டிஸ்கஷன் நடந்து வருகிறது. படத்தின் முதல் பாதியை நெல்சன் எழுதிக் கொண்டிருக்கிறார்.

அவரது கவனம் முழுவதும் திரைக்கதையை எழுதுவதில் இருக்கிறது. நெல்சன் வெறியில் இருக்கிறார். கண்டிப்பாக ரஜினி படத்தில் அடிச்சு தூக்குவாரு’ என்று கூறியுள்ளார்.

First published:

Tags: Nelson dilipkumar