முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / பீஸ்ட் படத்தால் நெல்சனுக்கு பறிபோன இந்திப் பட வாய்ப்பு!!

பீஸ்ட் படத்தால் நெல்சனுக்கு பறிபோன இந்திப் பட வாய்ப்பு!!

விஜய் - நெல்சன்

விஜய் - நெல்சன்

Good Luck Jerry : அடுத்த மாதம் 29-ம்தேதி கோலமாவு கோகிலாவின் இந்தி ரீமேக்கான குட்லக் ஜெர்ரி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

பீஸ்ட் படத்தை இயக்கியதால் இயக்குனர் நெல்சன் திலீப் குமாருக்கு இந்திப் படத்தை இயக்கும் வாய்ப்பு பறிபோனதாக சுவாரசிய தகவல் வெளியாகியுள்ளது.

நெல்சன் இயக்கத்தில் கடந்த 2018-ம் ஆண்டு கோலமாவு கோகிலா திரைப்படம் வெளியானது. இந்தப் படத்தில் நயன்தாரா, யோகி பாபு, சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

அனிருத் இசையில் வெளிவந்த இந்த திரைப்படம் மெகா ஹிட்டானது. இதனால் நெல்சனின் மார்க்கெட் உயர்ந்ததால் அடுத்ததாக சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் என்ற படத்தை இயக்கினார்.

இதற்கிடையே, கோலமாவு கோகிலா திரைப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. குட்லக் ஜெர்ரி என பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் தயாரிப்பாளர் போனி கபூர் – நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

தமிழில் நயன்தாரா நடித்த கேரக்டரில் நடித்துள்ளார் ஜான்வி. நிச்சயமாக வெற்றி பெறக் கூடிய படம் என்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு இந்தி ரசிகர்கள் மத்தியில் உள்ளது.

Also read... வசூலில் கலக்கும் வீட்ல விசேஷம்... 3 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? 

இந்தியில் இந்தப் படத்தை லைகா மற்றும் இயக்குனர் ஆன்ந்த் ராய் உள்ளிட்டோர் தயாரித்துள்ளனர். இந்தி ரீமேக்கை  முதலில் நெல்சன்தான் இயக்குவதாக இருந்ததாம். ஆனால் அதற்கு முன்பாக தளபதி விஜய்யின் பீஸ்ட் படத்தில் கமிட் ஆனதால், இந்தி படத்தை இயக்க முடியாத நிலைக்கு நெல்சன் ஆளானதாக சுவாரசிய தகவல் வெளிவந்துள்ளது.

அடுத்த மாதம் 29-ம்தேதி கோலமாவு கோகிலாவின் இந்தி ரீமேக்கான குட்லக் ஜெர்ரி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை சித்தார்த் செங்குப்தா இயக்கியுள்ளார்.

Also read... தமிழகத்தில் 'பாகுபலி' படத்தின் வசூல் சாதனையை முறியடித்த விக்ரம் படம்!  

டெலிவிஷன் மற்றும் வெப் தொடர்களை இயக்கிய இவருக்கு இதுதான் முதல் படமாகும். பீஸ்ட் படம் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ள நிலையில் அடுத்த படமான ரஜினியுடன் இணையும் ஜெயிலர் படத்தை சிறப்பாக கொண்டு வருவதற்கு, நெல்சன் முயற்சி மேற்கொண்டுள்ளார்.

First published:

Tags: Beast, Nelson dilipkumar