ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

சன்னி லியோன் ஆடைக்கு ஆதரவு.. சர்ச்சையில் சிக்கிய நடிகர் சதீஷ்.. அறிவுரை கூறிய இயக்குநர்!

சன்னி லியோன் ஆடைக்கு ஆதரவு.. சர்ச்சையில் சிக்கிய நடிகர் சதீஷ்.. அறிவுரை கூறிய இயக்குநர்!

நவீன், சதீஷ்

நவீன், சதீஷ்

ஓ மை கோஸ்ட் படத்தின் பாடல் வெளியீட்டு விழா கடந்த வாரம் சென்னையில் நடைபெற்றது. அந்த விழாவில் சன்னிலியோன் உட்பட படத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் கலந்து கொண்டு பேசினர்.

  • News18
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நடிகைகள் சன்னி லியோன் மற்றும் தர்ஷா குப்தாவின் ஆடைகள் குறித்து பேசி சர்ச்சையில் சிக்கிய நடிகர் சதீஷிற்கு  இயக்குநர் நவீன் அறிவுரை கூறியுள்ளார்.

நடிகை சன்னி லியோன், தமிழில் தயாராகும் வரலாற்று பின்னணியிலான பேய் படத்தில் நடிக்கிறார். இதில் அவர் நகைச்சுவை பேய் வேடத்தில் வருகிறார். இந்த படத்துக்கு, 'ஓ மை கோஸ்ட்' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தை இயக்குனர் யுவன் இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் சன்னி லியோனுடன் நகைச்சுவை நடிகர் சதீஷ், 'குக் வித் கோமாளி' புகழ் தர்ஷா குப்தா, சஞ்சனா, யோகி பாபு, தங்கதுரை, திலக் ரமேஷ், ஜி.பி. முத்து உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை வாவ் மீடியா என்டர்டெயின்மென்ட் மற்றும் ஒயிட் ஹார்ஸ் ஸ்டுடியோஸ் சார்பில் வீர சக்தி மற்றும் கே சசி குமார் இணைந்து தயாரித்துள்ளனர்.

இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா கடந்த வாரம் சென்னையில் நடைபெற்றது. அந்த விழாவில் சன்னிலியோன் உட்பட படத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் கலந்து கொண்டு பேசினர்.

Also read... முதலை வாயில கையவிட்ட மாதிரி ஆகிடுச்சு... அசீம் குறித்து பேசும் தனலட்சுமி - வெளியானது வீடியோ!

அபோது நடிகர் சதீஷ் பேசுகையில், நடிகை சன்னி லியோன் பாம்பேல இருந்து நமக்காக தமிழ்நாட்டுக்கு வந்துருக்காங்க அவங்க எப்படி ட்ரெஸ் பன்னிருக்காங்க பாத்தீங்க... கோயம்பத்தூர்ல இருந்து ஒரு பொண்ணு வந்துருக்கு தர்ஷா குப்தா... சும்மா சொன்னேன் என்று தர்ஷாவின் ஆடையை கிண்டலடிக்கு விதமாக பேசிய வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மூடர் கூடம் படத்தின் இயக்குநர் நவீன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில், சன்னிலியோன் திரையில் ஆடையின்றி தோன்றுவதும், கோயமுத்தூர் பெண் மேடையில் என்ன ஆடை அணிய வேண்டும் என்பதும் அந்த பெண்களின் தனிப்பட்ட உரிமை. @actorsathish சகோ, உங்கள் மனைவி என்ன ஆடை அணிய வேண்டும் என்பதை நிங்கள் முடிவு செய்தாலே அது தவறுதான். #மாற்றமேகலாச்சாரம் என்றும் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Actor Sathish, Director Naveen, Entertainment